காங்கிரசிற்கு வலிக்குது: மோடி தாக்கு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (9)
Advertisement
பிரதமர் மோடி, மோடி, பா.ஜ., பாஜ, ஹரியானா, அரியானா, காங்., காங்கிரஸ், காஷ்மீர், பாகிஸ்தான்,PM Modi, Modi, narendra modi, BJP, congress, cong, kashmir, pakistan, pak, hariyana,

ஹிசார்: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது முதல் காங்கிரசுக்கு வலிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் கோஹானா நகரில் நடந்த பிரசாரத்தில் மோடி பேசுகையில், தேச நலனுக்காக நான் முடிவு எடுக்க வேண்டுமா, கூடாதா? தேச நலன், அரசியலை விட உயர்ந்ததா இல்லையா? ஆனால், காங்கிரசால், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது முதல் காங்கிரசிற்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆக., 5 அன்று, யாரும் நினைத்து பார்க்காத முடிவு எடுக்கப்பட்டது. அன்று தான், இந்திய அரசியல் சாசன சட்டம், காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டது. கடந்த 71 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர்,லடாக்கில் வளர்ச்சி தடைபட்டிருந்தது. தற்போது, அந்த தடை நீக்கப்பட்டது. அப்போது முதல் காங்கிரசிற்கு வலி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு மருந்து இல்லை.




தூய்மை இந்தியா, சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பேசினால், பிரச்னை ஏற்படும் நோய் காங்கிரசிற்கு ஏற்பட்டுள்ளது. பாலகோட் தாக்குதல் குறித்து யாரும் பேசினால், அவர்களின் வலி அதிகரிக்கிறது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து குறித்து காங்கிரசின் அறிக்கைகள், பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, காங்கிரசிற்கு ஏன் வேதனை ஏற்படுகிறது, யாருக்காக பேசுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். காஷ்மீர் குறித்து காங்கிரஸ் வெளியிடும் அறிக்கைகள் யாரால் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு பயன் தருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் விரும்பும் வகையில் அறிக்கை வெளியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் விளக்க வேண்டும். என்னை விமர்சிக்க காங்கிரஸ் வெளியிடும் அறிக்கைகள், போலி தகவல்கள், மொழிகள் ஆகியவற்றை, தங்கள் தரப்பு வாதமாக, உலகம் முழுவதும் வலிமையாக பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் இடையே என்ன மாதிரியான புரிதல் உள்ளது. இதற்கான விடையை மக்கள், தேர்தலில் அளிக்க வேண்டும் என்றார்.





ஹிசார் நகரில் நடந்த, மற்றொரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் விவசாயிகள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவு செய்ய உள்ளோம். நமது விவசாயிகள், பருவமழையை மட்டும் சார்ந்திருப்பதை மாற்ற நடவடிக்கை எடுப்போம். தற்போது கிராமங்களில் பயன்படுத்தப்படும், பழைய நீர்மேலாண்மை திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். வீட்டு உபயோக நீரை, மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கான திட்டம், நாட்டில் 2024க்குள் கொண்டு வரப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
18-அக்-201920:21:58 IST Report Abuse
PANDA PANDI திருக்குறளை படிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
18-அக்-201919:40:19 IST Report Abuse
ANANDAKANNAN K காங்கிரஸ் அழியும் கட்சி அதை பற்றி பேசி காலத்தை வீணடிக்க வேண்டாம், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியாக உள்ள, ஊழல், தீவிரவாதம், பிரிவினைவாதம், லஞ்சம், முறைகேடுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் செயல்பாடுகள், இயற்கை வளங்கள் கொள்ளை, தூங்கும் MLA மற்றும் MP களின் செயல்பாடுகள், அரசுக்கு எதிராக செயல்படும் சமுதாய கொள்ளையர்கள், அரசு எந்திரத்தை உடைக்கும் அரசு அதிகாரிகள், வேலை செய்யாமல் தூங்கும் அரசு அதிகாரிகள், தகுந்த நேரத்தில் நீதி சொல்ல மறுக்கும் நீதிமன்றங்கள், போக்குவரத்தை மதிக்காத வாகன ஓட்டிகள், குளம் மற்றும் நீர்நிலைகளை காப்பற்றதா கயவர்கள், இது போன்ற குற்றங்களை களைய திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும், மேலும் ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள் ஆனால் இன்னும் மாநில அளவிலான லஞ்சம் நடக்கிறது மேலும் GST முறை கேடுகள் நடக்கிறது, இது சரி செய்தால் நாட்டிற்கு நலம் உண்டாகும்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
18-அக்-201919:35:10 IST Report Abuse
Gnanam குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை கண்டறிந்து,குளம் குட்டைகளை தூர்வாரி, மழைநீர் குளங்களில் பெருக வழி செய்தால் போதும். வீட்டுக்குவீடு மழைநீர் சேமிப்பு தேவைப்படாது. ஓரிரு ஆண்டுகளிலேயே அவை மழைநீர் வண்டலால் மூடப்பட்டுவிடும். குமரியின் இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் - வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையமும், பழைய (மீனாட்சிபுரம்) பேருந்து நிலையங்களும் குளங்களின் மேல் எழுப்பப்பட்டவை. மாற்று இடம் பார்த்து பேரூந்துநிலையங்கள் அமைத்து குளங்களை மீட்கவேண்டும். களியக்கவிலையிலிருந்து கன்யாகுமரிவரையிலுள்ள குளங்களை கண்டறிந்து தூர்வாரி செம்மை படுத்தினால் குமரி மாவட்டத்தில் தண்ணீருக்கு பஞ்சமே இராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X