பொது செய்தி

இந்தியா

குடித்தால் கறிவிருந்து வைக்கணும்: குஜராத்தில் விநோதம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், குடிபோதையில் ஒருவர் பிடிபட்டால் அவர் சுமார் 800 பேருக்கு கறி விருந்து படைக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது.

மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் வினோதமான அபாரதம் குறித்து கூறப்படுவதாவது: குஜராத்தில் மாநிலம் முழுவதும் மது விலக்கு கடைபிடிக்கப்படுகிறது. மீறி மது அருந்துவோர் பிடிபட்டால் அவருக்கு வழங்கப்படும் தண்டனை அதிகமாக காணப்படும். அந்த வரிசையில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கட்டிசிட்டாரா பழங்குடி கிராமத்தில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறினால் அபராத கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்துவதுடன் ரூ.20 ஆயிரம் மதிப்பிற்கு ஈடான 800 பேருக்கு அசைவ விருந்து அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில் குடிபோதையில் ஈடுபடும் ஆணகளால் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் கடந்த 2013-14 ம் ஆண்டில் இத்தகைய நடைமுறை துவக்கப்பட்டது. குடிபோதையில் தகராறு செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம், முரட்டுதனமான தாக்குதலில் ஈடுபட்டால் அபராதமாக ரூ.5 ஆயிரமும் கிராமத்தை சேர்ந்த சுமார் 700-800 பேருக்கு கறி விருந்து அளிக்க வேண்டும். இத்தகைய தண்டனை நல்ல பலனை தந்தது.


latest tamil news



இவை நடைமுறை படுத்தப்பட்ட காலத்தில் மூன்று முதல் நான்கு பேர் வரையில் பிடிபட்டனர். 2018-ம் ஆண்டில் ஒருவர் மட்டுமே இத்தகைய வழக்கில் பிடிபட்டிருந்தார். நடப்பு ஆண்டில் ஒருவர்கூட சம்பவத்தில் சிக்கவில்லை. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
19-அக்-201901:16:48 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் மாட்டுக்கறி விருந்தா? பேஷ் பேஷ்
Rate this:
Cancel
ஆப -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201921:47:43 IST Report Abuse
ஆப குஜராத்துல மது விலக்கும், அசைவ உணவும் போட்டி போடுது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-அக்-201920:40:32 IST Report Abuse
Sampath Kumar குஜராத்தி சுத்த சைவம் என்று யாரோ சொன்னார்கள் ஆக தமிழ் நாட்டில் உள்ளது போல மொய் விருந்து அங்கேயும் உள்ளது போல பேரு தான் தண்டனை ஆனா தின்கிறது அசைவம் பாவம் காந்தி இதை பார்த்தால் அவரே சுட்டு கொண்டு இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X