வீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை| Court awards 6-month jail term to Delhi Assembly Speaker Ram Niws Goel for house Trespass | Dinamalar

வீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: வீடு புகுந்து அத்துமீறி நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டில்லி சபாநாயகருக்கு மாஜிஸ்திரேட் கோர்ட் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கடந்த 2015-ம் ஆண்டு டில்லி சட்டசபை தேர்தலின் போது, கிழக்கு டில்லியைச் சேர்ந்த மணீஷ் கெய் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மது பாட்டில்கள், பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. தகவலறிந்த ஆம்
வீடு புகுந்து, அத்துமீறல், டில்லி, சபாநாயகர், 6 மாதம் சிறை

புதுடில்லி: வீடு புகுந்து அத்துமீறி நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டில்லி சபாநாயகருக்கு மாஜிஸ்திரேட் கோர்ட் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு டில்லி சட்டசபை தேர்தலின் போது, கிழக்கு டில்லியைச் சேர்ந்த மணீஷ் கெய் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மது பாட்டில்கள், பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. தகவலறிந்த ஆம் ஆத்மி கட்சி யைச் சேர்ந்த ராம்நிவாஸ் கோயல், தனது ஆதரவாளர்களுடன், மணீஷ் கெய் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ரகளை செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது. இதில் ராம் நிவாஸ் கோயல் உள்பட 4 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். டில்லி மெட்ரோ பொலிட்டன் மாஜிஸ்திரேட்டில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil newsராம்விலாஸ் கோயல் தற்போது டில்லி சட்டசபை சபாநாயகராக உள்ளார். இன்று நடந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சமர்விஷால், குற்றம்சாட்டப்பட்ட சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், உள்ளிட்ட 4 பேருக்கும் 6 மாதம் சிறைதண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ரூ. 1 லட்சம் பிணையத்தொகை செலுத்தினால் குற்றவாளிகள் ஜாமின் பெறலாம் எனவும் தெரிவித்தார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X