பொது செய்தி

இந்தியா

விடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு அபராதம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (13)
Advertisement
உ.பி., விடுதி, மாணவர், அபராதம்

லக்னோ: லக்னோ பல்கலையில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், அனுமதியின்றி விடுதியில் சாப்பிட்டதற்காக, அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலை விதிமுறைப்படி, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் மட்டுமே, விடுதியில் உணவு அருந்த வேண்டும். ஆனால், ஆயுஷ் சிங் என்பவர் விதியை மீறி, மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சிலர், காப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்கள் வந்து, ஆயுஷ் சிங்கை பிடித்தனர். உடனடியாக தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஆயுஷ் சிங், அதிகம் பசி எடுத்ததால், உணவு சாப்பிட்டதாகவும், எதிர்காலத்தில் இது போன்று செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால், விடுதி காப்பாளர் இதனை ஏற்க மறுத்து ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் கொடுத்துள்ளார். அபராத தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்த தவறினால், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

விடுதி காப்பாளர் கூறுகையில், போலி பெயர்களை பதிவு செய்து விடுதியில் மாணவர்கள் தொடர்ந்து உணவு அருந்தி வருவதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார்.

மாணவர்கள் சிலர் கூறுகையில், ஆயுஷ் சிங் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதிகாரிகள் வேண்டுமானால், அவர் சாப்பிட்ட உணவுக்கு மட்டும் பணம் வசூலித்திருக்கலாம். ஆனால், ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட கூறியது நியாயம் இல்லை. பசியில் இருக்கும் போதுதான் அவர் சாப்பிட்டுள்ளார். ஆயுஷ் சிங், பல்கலையில் இருந்து எதனையும் எடுத்து செல்லவில்லை என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-அக்-201919:13:50 IST Report Abuse
Rafi பசியாற பணம் இல்லாமல், பசியை போக்க வழியில்லாமல் வெட்கத்தை விட்டு சாப்பிட்டுவிட்டால், அவனை பிடித்தபோதே போதே அவமானமாகி இருப்பான். வெளியில் தெரியாமல் தனி அறையில் வைத்து விசாரித்து அனுப்பியிருந்தால் கண்ணியமாக இருந்திருக்கும். அந்த உணவை பார்த்தாலே, அதன் தரம் என்னவென்பதும், மாணவர்களிடம் அநியாயமாக கொள்ளை அடித்து கொண்டிருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. நம் இலவச சத்துணவு பல மடங்கு உயர்வாக தெரிகின்றது, அங்கு பரப்பியுள்ள உணவை பார்த்தால் புரிகின்றது.அவர்கள் வழங்கிய உணவின் தன்மை அதற்கு அவர்கள் நிர்ணயித்த தொகையை கணக்கெடுத்து, நியாயமாக அந்த விடுதியை நடத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் 10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201906:11:09 IST Report Abuse
Ivan aapu, George neenga vena oru mess arambichi ellarukum free a sapadu kodunga. Discipline na enna nu theriyatha kootam.
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201900:22:46 IST Report Abuse
ருத்ரா தெரிந்தே கண்டு பிடிக்கும் வரை கோடிகளை சுருட்டியவர்களுக்கு தொடர் ஜாமீன்.. அரசாங்கத்தின் அறுசுவை உணவு !பசியால் புசித்தவனுக்கு அதிலும் மாணவனுக்கு அதிகமான அபராதத் தொகை. நல்ல வேளை திருகாமராஜர் அலர்கள் இல்லை. தண்டனையை பரிசீலிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X