குர்கான்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலையொட்டி மகேந்திரகர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங். வேட்பாளர்களை ஆதரித்து காங். எம்.பி. ராகுல். அவர் பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி வருகிறது பா.ஜ., அரசு. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் 100 வேலை நாள் திட்டம் மற்றும் விவசாயிகள் கடன் ரத்து ஆகிய திட்டங்கள் தான். இவ்வாறு ராகுல் பேசினார்.

உயிர் தப்பினார் ராகுல்
பிரசாரம் முடிந்து மகேந்திரகார்க் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டில்லி புறப்பட்டார் ராகுல் .ஹெலிகாப்டர் பறந்த சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தெடார்ந்து இயக்க முடியாததால் ரிவாரி என்ற பகுதியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் ராகுல் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கியதாகவும், பின்னர் ராகுல் கார் மூலம் டில்லி புறப்பட்டதாகவும். இதில் ராகுல் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.