பொது செய்தி

இந்தியா

கல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,மாநிலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைகளில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாநிலஉயர் கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரி பல்கலைகழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதி்ல் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் மாணவ,மாணவியர் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கல்லூரி

லக்னோ: உ.பி.,மாநிலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைகளில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநிலஉயர் கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரி பல்கலைகழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதி்ல் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் மாணவ,மாணவியர் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கல்லூரி நேரங்களில் தங்கள் மதிப்பு மிக்க நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுகி்ன்றனர். இதனை மாநில அரசு கவனித்து வந்துள்ளது.latest tamil newsஇதனை அடுத்து மாநிலத்தில் உள்ள கல்லூரி மறறும் பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த ஒரு கற்பித்தல் சூழலை உறுதி செய்யும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஅமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இதனை கண்டறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய கூட்டங்களில் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201911:35:05 IST Report Abuse
ஆப்பு ஐயய்யோ... ஜியோக்காரன் மொபைல்லேயே டீ.வி, சினிமான்னு காமிக்க ஆரம்பிச்சுட்டானே... மொபைல தடைபண்ணினா பொருளாதாரம் எப்பிடி உயரும்?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-அக்-201903:12:42 IST Report Abuse
Rajagopal இது நல்லதுதான். படிப்பில் கவனம் செல்லாமல் நாள் முழுதும் பேய் பிடித்தவர்கள் போல, எதையும் பார்க்காமல், தெருவில் நடக்கும் போது கூட தலையை நிமிர்த்தாமல், சோசியல் மீடியாவில் மூழ்கி, selfie எடுக்கிறேன் என்று பாதாளத்தில் விழுந்து மரணமடைவது என்றெல்லாம் இளைய தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது போனை உபயோகிக்கட்டும். வீட்டிலும் பாடம் படிக்கும் போது செல் போனை தள்ளி வைத்து விட்டுப் பழக்க வேண்டும். இது ஒரு மனோ வியாதியைப் போன்றது. அதில் மூழ்கியவர்கள் கவண் செலுத்தும் தன்மையை இழக்கிறார்கள். எதையுமே வேண்டிய அளவுக்குத்தான் உபயோகிக்க வேண்டும். இளம் வயதில் இதை உணரும் திறன் இருக்காது. அதனால்தான் இந்த மாதிரி சட்டங்கள் தேவைப் படுகின்றன.
Rate this:
Cancel
RAJAN - murasori,இந்தியா
19-அக்-201900:00:35 IST Report Abuse
RAJAN யோகி அவர்களே நன்றி,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X