லக்னோ: உ.பி.,மாநிலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைகளில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநிலஉயர் கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரி பல்கலைகழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதி்ல் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் மாணவ,மாணவியர் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கல்லூரி நேரங்களில் தங்கள் மதிப்பு மிக்க நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுகி்ன்றனர். இதனை மாநில அரசு கவனித்து வந்துள்ளது.

இதனை அடுத்து மாநிலத்தில் உள்ள கல்லூரி மறறும் பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த ஒரு கற்பித்தல் சூழலை உறுதி செய்யும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இதனை கண்டறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய கூட்டங்களில் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE