சன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்

Updated : அக் 20, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (39)
Advertisement
சன்னி, வக்பு வாரியம், முஸ்லிம் தரப்பு, அதிர்ச்சி, அயோத்தி, திருப்பம்

புதுடில்லி: அயோத்தி வழக்கில், மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற தயாராக இருப்பதாக, சன்னி வக்பு வாரியம் அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, முஸ்லிம் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

உத்தர பிரதேசமாநிலம், பைசாபாத் மாவட்டம், அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பளித்தது.'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பிரச்னை குறித்து சமரசம் ஏற்படுத்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது.இந்த குழு நடத்திய பேச்சில், சமரசம் ஏற்படவில்லை.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஆக., 5 முதல், தொடர்ந்து, 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்து, இறுதி தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.இந்த விசாரணையின் இறுதி நாளன்று, மத்தியஸ்த குழுவின் சமரச பரிந்துரை, தலைமை நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் திடீர் திருப்பமாக, 'மத்தியஸ்த குழு அளித்துள்ள சமரச பரிந்துரை, ஹிந்து - முஸ்லிம் இரு தரப்புக்குமே மகிழ்ச்சியை அளிக்கும்' என, சன்னி வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஹித் ரிஸ்வி கருத்து தெரிவித்தார்.இதையடுத்து, தங்கள் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற, சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இஜாஸ் மெக்பூல் கூறுகையில், ''இந்த சமரச முயற்சி உள்நோக்கம் கொண்டது. ''சன்னி வக்பு வாரியத்தை தவிர, முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மற்ற அனைவரும், மத்தியஸ்த குழுவின் சமரச பரிந்துரையை நிராகரித்து விட்டோம். சன்னி வக்பு வாரியத்தின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-அக்-201921:22:58 IST Report Abuse
oce ராமர் பிறந்த இடம் தசரதன் அரண்மனை.தசரதனின் மூன்று மனைவியரில் முதல் மனைவி பெற்றெடுத்தவன் ராமன். மற்ற மனைவியர்களுக்கு லட்சுமணன் பரதன் சத்ருக்கனன் பிறந்தனர். அரண்மனையாக இருந்து பின் கோயிலாக மாறிய இடத்தை பாபர் இடித்து மசூதி கட்டினான். ஷாஜஹான் கட்டிய தாஜ்மகால் இருந்த இடம் கங்காதீஸ்வரர் கோயிலாக இருந்த இடம் என சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
22-அக்-201920:43:09 IST Report Abuse
rmr முஸ்லீம் மன்னர்கள் இங்கு படை எடுத்து வந்தது அனைவருக்கு தெரியும் அதெற்கு முன்பு இங்கு அந்த மதமே இல்லை அதனால் இது இந்துக்களின் இடம் என்று தீர்ப்பு வர வேண்டும் . இந்த முஸ்லீம் அக்கிரமிப்புகளையோ கண்டு அனைத்தையும் மாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
22-அக்-201920:22:47 IST Report Abuse
M.COM.N.K.K. அப்போது இந்தியாவை ஆண்ட ஒரு சில மன்னர்களே தவறாக நடந்துகொண்டார்கள்.இந்தியாவை ஆண்ட பெரும்பான்மையான மன்னர்கள் அனைத்து மதங்களுக்கும் சமஉரிமையே தந்தார்கள்.அதே நேரத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்திருக்கலாம் அதை நாம் தற்போது பெரிதாக எடுத்து கொள்ளத்தேவை இல்லை.சுமார் 1000 ஆண்டுகளில் எந்த ஒரு கோவில்களையும் யாரும் சேதப்படுத்தவில்லை ஒருசிலவற்றை தவிர.சேதப்படுத்தியிருந்தால்கூட அதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கலாம்.அக்பர் போன்ற அரசர்களை நாங்கள் மனதார மதிக்கிறோம். மதங்களுக்கு மதிப்புக்கொடுத்து ஆட்சிசெய்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.எப்போதோ நடந்த சில தவறுகளுக்காக இந்திய மக்களின் ஒற்றுமைக்கு பாதிப்பை உண்டாக்க யாரும் துணைபோக விரும்பவில்லை இதுவே உண்மை. சமரசம் ஏற்பட நாங்கள் மனதார விரும்புகிறோம் இதுவே ஒவ்வொரு இந்தியனின் மனநிலையும் ஆகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X