என்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம்

Added : அக் 18, 2019
Share
Advertisement
 என்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ம.பி.,க்கு மாற்றம்

புதுடில்லி: அசாம் மாநில, தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலாவை, மத்திய பிரதேச மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.வடகிழக்கு மாநிலமான அசாமின், என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தவர் பிரதீக் ஹஜீலா, 48. இவர் தலைமையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள், குடியுரிமை பதிவு பட்டியலை சரி பார்த்தனர்.

இதன் இறுதி பட்டியல், கடந்த ஆகஸ்ட், 31ல் வெளியிடப்பட்டது.இந்த பட்டியலில், லட்சக்கணக்கான இந்தியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ஹஜீலாவை மத்திய பிரதேச மாநிலத்திற்கு, தற்காலிக பணியிட மாற்றம் செய்யுமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.அசாமில், பிரதீக் ஹஜீலாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X