சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பாப்டே: ஓய்வு பெறும் ரஞ்சன் கோகோய் பரிந்துரை

Updated : அக் 20, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (5+ 7)
Advertisement
சுப்ரீம் கோர்ட், புதிய தலைமை நீதிபதி,  பாப்டே,  ரஞ்சன் கோகோய் ,பரிந்துரை

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும்படி, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகோய், கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்றார். இவரது பதவிக் காலம், அடுத்த மாதம், 17ல் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து, பதவிக் காலம் முடிவடையும் தலைமை நீதிபதி பரிந்துரை செய்வது மரபாக பின்பற்றப்படுகிறது.


பரிசீலனை



இதன்படி, தற்போது உச்ச நீதிமன்றத்தில், தனக்கு அடுத்தபடியாக, அதிக அனுபவம் பெற்றுள்ள மூத்த நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். தலைமை நீதிபதியின் இந்த பரிந்துரையை, சட்ட அமைச்சகம், பிரதமரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்.

இதைத்தொடர்ந்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, பிரதமர், அதை அனுப்பி வைப்பார். ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு நடக்கும்.


வாய்ப்பு



இது குறித்து உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, எஸ்.ஏ.பாப்டே, 63, அடுத்த மாதம், 18ல் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அவர், 18 மாதங்களுக்கு இந்த பதவியில் இருப்பார். பாப்டே, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ள எஸ்.ஏ.பாப்டே, 2013ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
19-அக்-201917:45:43 IST Report Abuse
Anantharaman Srinivasan ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கணும். அதுதான் முதல் condition. இல்லாவிடில் நாற்காலி ஆட்டம் காணும்..
Rate this:
Share this comment
Cancel
sachin - madurai,இந்தியா
19-அக்-201914:12:26 IST Report Abuse
sachin வாங்க வாங்க ..நீதி கிடைக்குமா மக்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201907:54:12 IST Report Abuse
ஆப்பு பார்க்க மிக வயது குறைந்தவராக இருக்காரே... தீர்ப்புகள் வருவதற்கு ரொம்ப நாளாகுமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X