விண்வெளியில் பெண்கள் நடைபயணம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
Nasa, astronauts, female spacewalk, நாசா, பெண்கள், விண்வெளி, நடை பயணம்

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீராங்கனையரான கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேர் ஆகியோர், விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டனர். இதன்மூலம், முதல் முறையாக, விண்வெளியில் பெண்களை மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள வைத்து, 'நாசா' விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், இங்கு, சுழற்சி முறையில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.சில சமயங்களில், இவர்கள், ஆய்வு மையத்திலிருந்து வெளியேறி, விண்வெளியில் மிதந்தபடி நடைபயணம் மேற்கொள்வர். ஆண்களின் துணையுடன் வீராங்கனையரும், இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வந்தனர்.




முதல் முறையாக, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விண்வெளி நடைபயணத்தை மேற்கொள்ள, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். கடந்த மார்ச்சில், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், விண்வெளி வீராங்கனையர் அணியும் உடைகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வீராங்கனையரான கிறிஸ்டினா கோச், 40, ஜெசிகா மேர, 42, ஆகியோர், விண்வெளியில் வெற்றிகரமாக நடைபயணம் மேற்கொண்டனர். விண்வெளி ஆய்வு மையத்தின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேட்டரியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக, இவர்கள், இருவரும், இந்த நடைபயணத்தை மேற்கொண்டனர்.

இதன்மூலம், முதல் முறையாக, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே மேற்கொண்ட விண்வெளி நடைபயணம் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-அக்-201901:46:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாழ்த்துக்கள். இப்போவாவது பெண்களுக்கு ஆதரவுக்கரம் கொடுத்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X