மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 பேர் நாடு திரும்பினர்

Updated : அக் 19, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (9+ 7)
Advertisement
 மெக்சிகோ,  நாடு கடத்தல்,  நாடு, திரும்பினர்

புதுடில்லி: வட அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற, 311 இந்தியர்களை, மெக்சிகோ குடியுரிமை அதிகாரிகள், இந்தியா அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம், நேற்று காலை, புதுடில்லி வந்தடைந்தனர்.

அமெரிக்காவில் பணி செய்ய ஆசைப்பட்டு, இந்தியாவை சேர்ந்த பலர், வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

இவர்களிடம் பெரும் தொகையை பெற்று, சட்ட விரோதமாக மெக்சிகோ கொண்டு சேர்க்கும் பணியை, சில இந்திய தரகர்கள் செய்து வருகின்றனர். அமெரிக்க எல்லைஇப்படி சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயல்பவர்கள், முதலில், தென் அமெரிக்க நாடான, ஈக்வடாருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அங்கிருந்து கொலம்பியாவில் உள்ள பனாமா காடுகள் வழியாக, 15 முதல், 20 நாட்கள் நடந்து சென்று, மத்திய அமெரிக்க நாடுகளான கோஸ்டாரிகா, கவுதமாலா வழியாக, மெக்சிகோவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அங்கு சிறிது காலம் காத்திருந்து, மெக்சிகோ - அமெரிக்க எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இப்படி சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் இந்தியர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 9,000 ஆக உயர்ந்து உள்ளதாக, ராய்டர்ஸ் செய்தி நிறுவனம், கடந்த ஆண்டு தெரிவித்தது.


சரிபார்ப்பு



இதையடுத்து, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் இந்தியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, மெக்சிகோ அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது.இதையடுத்து, மெக்சிகோவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த, 311 இந்தியர்களை, இந்தியா அனுப்ப, அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்த, 311 பேரும், 'போயிங் 747 - 400' தனி விமானம் மூலம், மெக்சிகோவில் இருந்து, புது டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் மட்டும் பெண்; பெரும்பாலானவர்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள்.இவர்கள், நேற்று காலை, 5:00 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (9+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
19-அக்-201919:16:58 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy இவர்களை நாடுகடத்தப்பட்டவர்கள் எனக்கூறுவது முற்றிலும் தவறு.இவர்கள் தாங்கள் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று அறிந்த பின்னும் அதைமேற்கொண்டுள்ளார்கள்.இச்செயலை சவூதி அரேபியால் செய்திருந்தால் அவர்கள் கதியை நினைத்தும் பார்க்க இயலாது.நாடுகடத்தல் என்பது மிகவும் வேறு.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-அக்-201917:48:32 IST Report Abuse
Pugazh V இவர்களிடம் பணம் பிடுங்கி ஏமாற்றி யதும் இத்தனை மடத்தனமாக பணத்தைக் கொடுத்ததும் டுமிளர்கள் இல்லையே. எல்லா செய்தியிலும் தமிழ்நாடு தமிழ் மக்கள் மற்றும் தமிழர்கள் இனத்தை அவமதித்து வட இந்திய ர்களுக்கு வெண்சாமரம் வீசி எழுதும் வாசகர்கள் அறிய வேண்டும். உணர வேண்டும். நன்றி
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
19-அக்-201917:09:54 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி Australia வந்தூறுக்கலாமில்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X