மசூதியில் குண்டு வெடிப்பு ஆப்கனில் 62 பேர் பலி

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மசூதியில் குண்டு வெடிப்பு ஆப்கனில் 62 பேர் பலி

ஜலலாபாத், : ஆப்கானிஸ்தானில், மசூதியில் குண்டு வெடித்ததில், 62 பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆசிய நாடான ஆப்கனின், நன்கார்கர் மாகாணத்தின் தலைநகரான ஜலலாபாதில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது, திடீரென குண்டு வெடித்தது.
இதில், மசூதியின் கூரை தகர்ந்து சரிந்தது. இந்த குண்டு வெடிப்பில், 62 பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குண்டு வெடிப்பில், மசூதி பலத்த சேதமடைந்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தலிபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். '

ஆப்கனில் நடக்கும் வன்முறைகளை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, அப்பாவி மக்கள் பலியாகின்றனர்' என, ஐ.நா., சார்பில், சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில், மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201917:37:14 IST Report Abuse
டுமீலன் இதல்லவா அமைதி மார்கம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X