பொது செய்தி

இந்தியா

சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
Rajnath Singh, approve, admission, girl students, Sainik schools,  சைனிக் பள்ளிகள், ராஜ்நாத், பாதுகாப்பு அமைச்சர்,

புதுடில்லி: ராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் வகையில் செயல்படும் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளையும் சேர்க்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில், ராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் வகையில் சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் தற்போது, ஆண் குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில், சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளையும் சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.




இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சைனிக் பள்ளிகளில் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் மிசோரமில் உள்ள சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்க அனுமதி அளிக்கப் பட்டது. இதில் கிடைத்த பலனை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவானது.

எனவே, சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று( அக்.,18) ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, வரும் 2021 - 22ம் கல்வியாண்டில் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
18-அக்-201922:01:48 IST Report Abuse
mindum vasantham tharamana கட்டணத்தில் தரமான பள்ளி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X