சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அகழியில் விழுந்து யானை பலி: காலில் கம்பி சிக்கியதால் விபரீதம்

Added : அக் 18, 2019
Advertisement

ஆனைமலை:கம்பி வேலியில் சிக்கி, கால் இடரி அகழியில் விழுந்த ஆண் காட்டு யானை, பரிதாபமாக இறந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சரளைப்பதி கிராமத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலம் அருகே, ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு சென்றார்.
அங்கு, விளைநிலத்தின் அருகே காலில் கம்பிகள் சிக்கிய நிலையில் சுமார், 30 வயதுள்ள ஆண் காட்டு யானை அகழியில் இறந்து கிடந்தது.விளைநிலத்தினுள் தென்னை மரங்களின் குருத்து பகுதியை சாப்பிட வந்த யானை, வேலியில் இருந்த கம்பியில் சிக்கி, கால் இடரி அகழியில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.
புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:வனத்தை ஒட்டிய பகுதியில் அகழியை கடந்து, விளைநிலத்தினுள் யானை புகுந்து உள்ளது. அங்கு, சாதாரண கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்தது.பயிர்களை சாப்பிட்டு விட்டு வனத்தினுள் செல்ல முயற்சிக்கும் போது, மண் சரிவு ஏற்பட்டதில் யானை கால் தவறி வேலிக்கம்பியை உடைத்து, அகழியில் விழுந்தது.விளைநிலத்தில் இருந்து, அகழி ஆழமாக இருந்ததால் மார்பு, முகம் பகுதியில் காயம் ஏற்பட்டு யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X