அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் மீது நடவடிக்கை காங்.,வலியுறுத்தல்

Added : அக் 18, 2019
Advertisement

சென்னை:'விடுதலை புலிகள் இயக்க தலைவர் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயகுமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு கொடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:நாங்குநேரியில் வன்முறையை அவிழ்த்து விட்டு ஓட்டு சாவடிகளை கைப்பற்ற திட்டம் தீட்டப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன்.

ஓட்டு சாவடிகளை கைப்பற்ற காவல் துறையை பயன்படுத்த ஆளும் கட்சி திட்டம் தீட்டியுள்ளது.எனவே ஓட்டு சாவடிகளில் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம்; அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

'ராஜிவை நாங்கள் தான் கொன்றோம்; தமிழ் மண்ணில் புதைத்தோம்' என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதுடன் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் புகைப்படத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்கிறார்; இது தேர்தல் விதிமீறல். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டதற்கு 'மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்' என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X