அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினால் வந்தது வினை: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

Updated : அக் 19, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசாரத்தில் மாணவியரை அமர வைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று காலை 9:30 மணியளவில்
ஸ்டாலின், வந்தது வினை, தலைமை ஆசிரியர், நோட்டீஸ்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசாரத்தில் மாணவியரை அமர வைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று காலை 9:30 மணியளவில் ஏழுசெம்பொன் கிராமத்தில் திண்ணை பிரசாரம் செய்தார்.அந்த பிரசார கூட்டத்தில் பள்ளி மாணவியர் அமர வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக சமூகவலைதளமான 'வாட்ஸ் ஆப்'பில் படத்துடன் தகவல் பரவியது. மேலும் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து ஏழுசெம்பொன் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கேசவனிடம் பள்ளி நேரத்தில் மாணவியர் திண்ணை பிரசார கூட்டத்தில் அமர்ந்திருந்தது குறித்து சி.இ.ஓ. முனுசாமி விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.

ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள தி.மு.க. கிளைச் செயலர் ஜெயச்சந்திரன் பள்ளிக்குச் சென்ற மாணவியரை அழைத்து கூட்டத்தில் அமர வைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
25-அக்-201906:12:55 IST Report Abuse
Ram இந்த கருப்பு சட்டைக்காரர்களால் தமிழ்நாட்டில் குடி கும்மாளம் ரவுடித்தனம் அதிகரிக்குமே தவிர நாடுமுன்னேற்றத்திற்க்கு ஒன்னும் நடக்காது
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-அக்-201901:20:08 IST Report Abuse
 nicolethomson தரம்கெட்ட அரசியல்வாதிகளால் தான் மாணவத்தலை முறையை பாழ்படுத்த முடியும் அதனை ஸ்டாலின் தந்தை சரியாகவே பண்ணான் , இப்போ இவருமா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-அக்-201903:38:48 IST Report Abuse
J.V. Iyer தமிழை வளர்க்கும் விதம் நன்றாக தெரிகிறது. வருங்கால வோட்டு வங்கிகள். துட்டுக்கு வோட்டு போட மக்களை தயார் செய்கின்றனர் இவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X