சிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி என அவதூறாக பேசியவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர்

Updated : அக் 20, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (201)
 சிறுமுகை, காரப்பன், வலுக்கிறது, எதிர்ப்பு

கோவை: 'கிருஷ்ணன் ஒரு பொம்பள பொறுக்கி... அத்திவரதர் பரதேசி' என, அவதுாறாக பேசிய, சிறுமுகை காரப்பன் பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர். இவர், கோவையில் செப்., 29ல் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடந்த கருத்தரங்கில், அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து அவதுாறாக பேசினார்.இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, இந்துக்கள் மத்தியில் குறிப்பாக, பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.

காரப்பனின் வாய்க்கொழுப்பு பேச்சு


கோவையில் நடந்த திராவிடர் இயக்க நிகழ்ச்சியில் காரப்பன் பேசியதாவது:இன்ஜினியரிங் படிப்பில் மகாபாரதத்தை வைத்துள்ளனர். இன்ஜினியரிங் படித்தால் வேலையா கிடைக்கப் போகிறது என்பதால் மகாபாரதத்தை பாடமாக வைத்துள்ளனர். பாஞ்சாலிக்கு சேலை கட்டிய கிருஷ்ணர் எந்த தறியில் அந்த சேலையை நெய்தார்? அவன் ஒரு பொம்பள பொறுக்கி... நெய்தால்தானே சேலை கிடைக்கும்.

ஆற்றிலுள்ள மணலை எண்ணினாலும் எண்ணலாம். கிருஷ்ணரின் மனைவிகளை எண்ண முடியாது. இதையெல்லாம் ஆவென்று மக்கள் கேட்கின்றனர்.சமீபத்தில் ஒரு பரதேசி அத்திவரதர் என்று... 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர் களின் வாழ்க்கையே நாசமாகி விட்டது.இவ்வாறு இந்து கடவுள்களை இழிவாக காரப்பன் பேசியுள்ளார்.


சிறுமுகையில் மக்கள் அளித்த பேட்டி:
யாதவ சமூகம் கொதிப்பு

கிருஷ்ணரை இழிவுபடுத்தியது, ஒட்டுமொத்த யாதவ சமூகத்தை இழிவுபடுத்தியதாக கருதுகிறோம். தனக்கு ஒரு விஷயம் பிடிக்காவிட்டால், ஒதுங்கி விட வேண்டும். மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது. நம் மனதை புண்படுத்திய காரப்பனை நாம் புறக்கணிப்போம்.
- ஆனந்தாழ்வார், 30லட்சுமி நரசிம்மர் கோவில்இலுப்பநத்தம்.


மன்னிப்பு கேளுங்க!


பல கோடி இந்துக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தியதற்கு பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். காரப்பன் கடையில், இந்து பெண்கள் சேலை வாங்கியதால் தான்,அவருக்கு வியாபாரம் பெருகியது என்பதை, அவர் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இவர் மட்டுமின்றி அவரது ஆதரவு அமைப்புகளை தடை செய்ய வேண்டும். மத உணர்வுகளை புண்படுத்தும், இவர் நடத்தும், காரப்பன் சில்க்ஸ் கடையில் துணிகள் வாங்காமல் புறக்கணிப்போம்.

-ஆர். சங்கீதா, 39கார்மென்ட் வணிகம்புங்கம்பாளையம்.


வேதனை தருகிறது!

பல கோடி இந்துக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்தியவருக்கு, அரசு தரும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இது வேதனை தருகிறது. காரப்பன் போன்ற கடவுள் மறுப்பு பேர்வழிகள்விற்பனை செய்யும் சேலைகளை வாங்காமல், புறக்கணிக்க வேண்டும்.

-என்.முத்துசாமி, 49 விவசாயி, சிறுமுகை.


சேலை வாங்காதீர்!


கடவுள்களை கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி காரப்பன் விமர்சித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. அவர் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவர் நடத்தும், 'காரப்பன் சில்க்ஸ்' கடையில் சேலைகள் வாங்கக் கூடாது.-பி.சாந்தி, விவசாயி மேட்டுப்பாளையம்.


தண்டிக்க வேண்டும்!


சமுதாயம் நல்ல நிலையில் இருக்க இறைபக்தி, நல்லொழுக்கம் அவசியம். அதை சிதைக்கும் வகையில் பேசும் நபர்களை, அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும். இது போன்ற நபர்களுக்கு ஆதரவு தரும் அமைப்புகளையும், புறக்கணிக்க வேண்டும்.
-ஆர். நஞ்சுண்டேஸ்வரன், 62 சமூக ஆர்வலர், சிறுமுகை


நடவடிக்கை வேண்டும்!


இறைபக்திக்கு எடுத்துக்காட்டாக உள்ள சமூகத்தில் இருந்து கொண்டு, இறைவனை இழிவுபடுத்துவது, மக்களின் நம்பிக்கையை கேவலமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இவரைப்போன்றவர்களை புறக்கணிக்க வேண்டும்.

-என்.சீனிவாசன், 61 நெசவாளர், மூக்கனுார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X