பொது செய்தி

இந்தியா

அக்.31ல் திருச்சியில் காவிரி நதிநீர் குழு கூட்டம்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்.31ல் திருச்சியில்  காவிரி நதிநீர் குழு கூட்டம்

புதுடில்லி, காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் அடுத்த கூட்டம், முதன் முறையாக, திருச்சியில், அக்.31ல் நடக்க உள்ளது.காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் ஆலோசனை கூட்டம், குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில், மத்திய நீர்வள ஆணைய அலுவலகமான சேவா பவனில், நேற்று நடைபெற்றது.ஆலோசனையின் போது, குழுவில் உறுப்பினர்களாக உள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின், தொழில்நுட்ப பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் பங்கேற்றனர்.


latest tamil news



இக்கூட்டத்தில், நான்கு மாநிலங்களின் தொழில்நுட்ப பிரதிநிதிகளும், காவிரி நதிநீர் தொடர்பான, தங்கள் தரப்பு புள்ளிவிபரங்களை சமர்பித்தனர்.அதில், மழைபொழிவு, அணைகளுக்கான நீர்வரத்து, வெளியேற்றம் உட்பட தற்போதைய நிலவரங்கள் அனைத்தும் இருந்தன. காவிரி நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழைபொழிவு நிலவரங்கள் ஆராயப்பட்டன.இறுதியாக, அடுத்த ஆலோசனை கூட்டத்தை, திருச்சியில், அக்., 31ல், நடத்துவது என, முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே, டில்லிக்கு வெளியே, பெங்களூருவில் கூட்டம் நடைபெற்ற நிலையில், முதன்முறையாக தமிழகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201901:17:12 IST Report Abuse
Syed Ghouse Basha திருச்சிக்கு காவிரி நதிநீர் குழு வருவது பெரிதல்ல! காவிரி நதி நீர் திருச்சிக்கு வருமா? பெங்களூரில் வறட்சி நிலவும்போது அங்கு கூடிய கூட்டம் தமிழக காவிரிக்கு மழைநீர் வந்துள்ள இந்த நேரத்தில் குழு வருவது எங்கேயோ இடிக்குது! கவனம்!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X