தமிழ்நாடு

வைகை அணையில் நோயால் மீன்கள்... பாதிப்பு! நீரின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு

Added : அக் 19, 2019
Advertisement
வைகை அணையில் நோயால் மீன்கள்...  பாதிப்பு! நீரின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு

ஆண்டிபட்டி : வைகை அணையில் நோய் தாக்கத்தால் மீன்கள் பாதிப்படைந்துள்ளன. நீரின் தன்மை குறித்து மீன் வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

வைகை அணையில் கட்ளா, மிருகாள், ரோகு வகை மீன்கள் குஞ்சுகளாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆறா, சொட்டைவாளை, உளுவை உட்பட பலவகை மீன்களும் உள்ளன. வைகை அணையில் பிடிக்கப்படும் மீன்கள் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அணையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. வெப்பத்தின் தாக்கத்தால் மீன்கள் இறந்தாக பலரும் நம்பி வந்தனர். தற்போது வைகை அணையில் பிடிபடும் மீன்களின் உடலில் கொப்புளங்கள், புண்கள் காணப்படுகின்றன. செதில்கள் உதிர்ந்தும் உள்ளன.

மீனவர்கள் கூறியதாவது:மழையால் வைகை அணையில் தற்போது அதிக நீர் வரத்தால் மீன்கள் அதிகம் பிடிபடுவதில்லை. பிடிபடும் மீன்களின் உடலில் ரத்தக்கசிவு தெரிவதுடன் அவற்றின் நிறமும் மாறி உள் ளது. 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ள அணை நீரில் ரசாயன கழிவுகள் ஏதும் கலக்கிறதா அல்லது விவசாய நிலங்களின் உரம், பூச்சி மருந்தின் தாக்கம் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஆய்வு செய்யும் மீன்வளத்துறையினர் பாதிப்படைந்த மீன்கள், அணையின் நீர் மாதிரி ஆகியவற்றை பரிசோதனைக்காக துாத்துக்குடி மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X