பொது செய்தி

இந்தியா

வங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை பாதுகாப்பு படை மறுப்பு

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: வங்கதேச வீரர்கள் தான், அத்துமீறி தாக்குதல் நடத்தினர்; எங்கள் தரப்பிலிருந்து, ஒரு குண்டு கூட சுடப்படவில்லை' என, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.






அண்டை நாடான வங்கதேசத்துக்கும், நமக்கும் இடையே, 4,096 கி.மீ., நீள எல்லை பகுதி உள்ளது. வங்கதேசம், நம் நட்பு நாடு என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே, பெரிய அளவில் எல்லை பிரச்னை எதுவும் இருந்தது இல்லை.இந்தியா - வங்கதேச எல்லையில் உள்ள பத்மா ஆற்றில், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரால், மேற்கு வங்க மாநில மீனவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவரை மீட்கச் சென்ற, இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது, வங்கதேச வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், விஜய் பான் சிங், 51, என்ற வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்; மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம், இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.





இது குறித்து, வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் வெளியிட்ட அறிக்கை:இந்திய மீனவர் எல்லை தாண்டியது குறித்து பேச வரும்படி, இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுத்தோம். படகில் வந்த இந்திய வீரர்களில் சிலர், சீருடை அணியாமல் இருந்தனர். அவர்கள், நாங்கள் கூறிய இடத்துக்கு வராமல், இந்திய மீனவரை மீட்கும் நோக்கில் வேகமாக வந்தனர். எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்; தற்காப்பு கருதி, நாங்கள் திருப்பிச் சுட்டோம். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மறுப்பு


இதை மறுத்து, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதாவது:அத்துமீறியது, வங்கதேச வீரர்கள் தான். எங்கள் தரப்பில் இருந்து, ஒரு முறை கூட சுடவில்லை. பிடிபட்ட மீனவர், இன்னும் வங்கதேச வீரர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளார்.வங்கதேச வீரர்கள் அழைத்ததால் தான், நாங்கள் அங்கு சென்றோம். பேச்சு நடத்துவதற்காக சென்றதால், எங்கள் தரப்பில் ஒருவர் மட்டும் சீருடை அணியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
19-அக்-201912:41:26 IST Report Abuse
Anand இவனுங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே தவறு என நிரூபிக்கிறார்கள் போலும். எப்படியோ மூர்க்கம் அடித்துக்கொண்டு சாகட்டும் என விட்டிருக்கவேண்டும். நன்றி கெட்ட ஜென்மங்கள்.
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ்,சென்னை ஒருவர் சீருடை இல்லாமல் சென்றார் என்றார் எத்தனை பேர் சீருடையோடு சென்றார்கள் என்று கூறலாம்.சுடப்பட்டு இறந்தவர் சீருடை இல்லாதவராக இருக்கும்பட்சத்தில் அவர் சுடப்படும்போது மற்றவர் எதிர் தாக்குதல் நடத்தவில்லையா??இதில் ஏதோ மிகப்பெரிய தவறு உள்ளது.இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை.இவ்வளவு சாதாரணமாக சீருடை அணியாமல் இருந்தார் என்று கூறுவது தவறு.நிராயுதபாணியாக அவர் இருக்குமபட்சத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியதும் தவறு.கண்டிப்பாக இது இராணுவ ரீதியான விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
19-அக்-201908:48:58 IST Report Abuse
Arasu முன்பு வாஜிபாய் பிரதமராக இருந்த பொது 9 ராணுவ வீரர்களை கொடூரமாக கொன்றனர் ..இப்போ மோடி பிரதமர் ஆக இருக்கும் பொது ஒரு வீரரை சுட்டு கொன்றனர்... இதை விசாரிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X