பொது செய்தி

இந்தியா

சாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை எட்டியது

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று முதன் முறையாக, 9 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை, வர்த்தகத்தின் இடையே எட்டியது.காலாண்டு முடிவுமும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 9.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், வர்த்தக முடிவில், 8.97 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து நிலைபெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வரவிருந்த நிலையில், அதன் பங்குகளின் விலை, நேற்று வர்த்தகத்தின் போது அதிகரித்தது.இந்நிறுவனப் பங்குகள் விலை, வர்த்தக முடிவில், 1.37 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,415.30 ரூபாய் என்ற அளவில் முடிவுற்றது. கடந்த ஆண்டுவர்த்தகத்தின் இடையே பங்குகளின் விலை, 2.28 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,428 ரூபாய் என்ற நிலையை தொட்டது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 8 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.காலாண்டு முடிவிலும் கலக்கல்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18.6 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 262 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலகட்டத்தில் 9,516 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த வருவாய், 1.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.டெலிகாம் நிறுவனமான, ஜியோவின் நிகர லாபம், 990 கோடி ரூபாய்.சில்லரை வணிகமான, இ.பி.ஐ.டி.டி.ஏ., நிகர லாபம், 13 சதவீதம் அதிகரித்து, 2,322 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.காலாண்டு முடிவிலும் கலக்கல்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18.6 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 262 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், இதே காலகட்டத்தில் 9,516 கோடி ரூபாயாக இருந்தது.

மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த வருவாய், 1.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.டெலிகாம் நிறுவனமான, ஜியோவின் நிகர லாபம், 990 கோடி ரூபாய்.சில்லரை வணிகமான, இ.பி.ஐ.டி.டி.ஏ., நிகர லாபம், 13 சதவீதம் அதிகரித்து, 2,322 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
19-அக்-201922:03:59 IST Report Abuse
ஆ.தவமணி,   2002 - 2003 வாக்கில் செல்போன்களின் விலை சற்றேறக்குறைய 10000 ரூபாய்க்கும் மேல் நம்நாட்டில் இருந்த காலத்தே ரிலையன்ஸ் 501 ரூபாய்க்கு போன் கொடுத்து, ஒன்று வாங்கினால் ஒன்று விலையில்லாமலும் கொடுத்து தொலைத்தொடர்பில் சிகரத்தை எட்டியது. அதன் காரணமாக 90 சதவீதத்திற்கும் மக்கள் செல்போன் வாங்கினார்கள்.. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ வரவதற்கு முன்னர் வோடபோன், ஏர்டெல், ஏர்செல், பி.எஸ்.என்.எல் போன்ற அனைத்து நிறுவனங்களும் .. 28 நாட்களுக்கு சற்றேறக்குறைய ரூ. 350 கட்டணம் பெற்றுக்கொண்டு, வாய்ஸ்கால் பிரீ என்றும் ஒரு மாதத்திற்கு ஒரு ஜி.பி. இணையம் பிரீ என்றும் மக்களிடம் வசூலித்து மகிழ்ந்தார்கள்.. எஸ்.எம்.எஸ். க்கும் கட்டணம் வசூலித்து வந்தனர்.. ஆனால், ஜியோ வந்ததும்.. 84 நாட்களுக்கு ரூ. 399 கட்டணத்தில், தினமும் 1 .1/2 ஜி.பி. இணையமும், அனைத்து போன்கால்களும், தினசரி 100 எஸ்.எம்.எஸ். பிரீ என்றும் துவங்கினர்.. உடனே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதே நிலைக்கு இணைப்பு வழங்கினார்கள்.. அப்படி எனில், ஜியோ வருவதற்கு முன்னர் ஆண்டாண்டு காலமாய் மக்களின் பணத்தை கொள்ளையடித்து கொழித்து - கொழுத்து வந்துள்ளார்கள் என்றுதானே அர்த்தம்? ஆனாலும், அப்படி கொள்ளையடித்திருந்தாலும், திரு. ப.சி. அவர்கள் புண்ணியத்தால் ஏர்செல் இருக்கும் இடமே தெரியாமல் ஒழிந்தே போய்விட்டது. , திருவாளர் மாறன் சகோதரர்களின் புண்ணியத்தால் பி.எஸ்.என்.எல். மக்களிடம் கொள்ளையடித்த தன் அநியாய இலாபங்களை இழந்து வீழ்ச்சியடைந்து, இன்று ஊற்றிக்கொள்ளும் தறுவாயில் உள்ளது. ஏர்டெல்லின் கொள்ளை இலாபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படதால், ஜியோ வில் இருந்து தமது அணைப்பிற்கு வரும் அனைத்து போன்களுக்கும் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்து, சமீபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஜியோ விடம் இருந்து வசூல் செய்து விட்டது. அதன் காரணமாக தமக்கு இழப்பு நேராமல் இருக்க, தற்போது ஜியோ இணைப்பு தவிர மற்ற இணைப்புகளுக்கான அவுட் கோயிங் கால்களுக்கு ஒரு நிமிடத்திற்கு ஆறு பைசா கட்டணம் என்று நான்கு நாட்களாக ஜியோ வசூல் செய்கிறது... உடனே பொங்கி எழுந்த ஏர்டெல்.. ஒவ்வொரு தெருவிலும் குடைகளின் கீழ் கடை விரித்து .. 399 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு தினமும் இணையத்துடன் அனைத்து போன்கால்களும் பிரீ என்று விளம்பரம் செய்து ஜியோ வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்கிறது... நம் மக்களும் மாதா மாதம் ஆறாயிரம் ரூபாய் இலவசத்தொகையும், ஒரு இலட்சம் நகைகடன் வாங்கியிருந்தால் கடன் தள்ளுபடியும் கிடைக்கும் என்று நம்பி.. மாதாமாதம் ஆறாயிரம் ரூபாய் வந்தால் வேலைக்கே செல்லாமல் ரோட்டில் உட்கார்ந்து சட்டமடித்துக்கொண்டே, 5 ம் தேதிக்குள் 6000 ரூபாயை வாங்கி தினசரி 200 ரூபாய்க்கு பிராண்டியும், சைடு டிஷ் சும் வாங்கிக்கலாம் என்று கணக்கு போட்டு, பெருந்தன்மையுடன் ஓட்டு போட்ட மெஜாரிட்டியினர் உள்ள மகானுபாவர்கள் தானே... அதனால் ஆகா.. ஜியோ காரன் நிமிடத்திற்கு ஆறு பைசா கேட்கிறான்.. ஆனால் ஏர்டெல் காரனோ போன் பிரீ என்கிறான் என்று சிலர் ஓடினார்கள் .. நானும் ஏர்டெல் பிராஸ்பெக்ட் படித்தேன்.. தினமும் ஒரே ஒரு ஜி.பி. இணையம் மற்றும் போன்கால் பிரீ.. இதனை தற்போது ஜியோவில் இருந்து ஏர்டெல் லுக்கு மாற்றும் நம் மக்கள் கவனிக்க மறந்து விட்டனரே .. 70 - 80 % நபர்களிடம் ஜியோ சிம் உள்ள இந்த காலத்தில், தினமும் ஒன்றரை ஜி.பி. இணையத்துடன், ஜியோ தவிர மற்ற இணைப்புகளுடனான அவுட்கோயிங் போன்களுக்கு நிமிடத்திற்கு ஆறு பைசா என்பது அதிக கட்டணமா? அல்லது தினமும் ஒரு ஜி.பி. இணையத்துடன் அனைத்து போன்கால்களும் பிரீ என்ற விளம்பரத்துடன் கூடிய ஏர்செல் கம்யூனிகேஷன் அதிகக்கட்டணமா என்று கூட சிந்தித்து பார்க்க திராணியில்லாத .. விளம்பரத்தைக்கண்டு ஓடும் மாக்கள் தானே நம் மக்கள்?
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-அக்-201911:32:52 IST Report Abuse
pradeesh parthasarathy மோடி இருக்க எனக்கு என்ன பயம் ...ஒன்பது லட்சம் என்ன தொன்னூற்று லட்சம் கோடி ஆக்கி காட்டுவேன் ....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-அக்-201910:01:17 IST Report Abuse
Sampath Kumar இது போல மற்ற நிறுவன்கள் ஏன் செய்ய இயலவில்லை ?? அங்கு தான் உள்ளது சூட்சுமம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X