டில்லி ஏழுமலையான் கோவிலில் ஊழல்

Added : அக் 19, 2019
Advertisement
டில்லி, ஏழுமலையான், கோவில், ஊழல்

திருப்பதி: டில்லியில் உள்ள, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஏழுமலையான் கோவிலில், 4 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலைநகர் டில்லியில், ஏழுமலையான் கோவிலை கட்டி உள்ளது. இக்கோவிலின் நிர்வாக பொறுப்பு, அங்குள்ள ஆலோசனை கமிட்டியிடம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கோவிலின் நிதி சுருட்டப்பட்டு, 4 கோடி ரூபாய் வரை, முறைகேடு நடந்து உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்குமாறு, ஆந்திர லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி.,யான மல்லேஸ்வரராவிற்கு, மாநில அரசு உத்திரவிட்டது. இதுகுறித்து, மல்லேஸ்வரராவ் கூறியதாவது:கோவிலின் ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. நன்கொடையாக வந்த புடவைகள், வஸ்திரங்கள் உள்ளிட்டவை, ஏலம் விடுவதற்கு பதிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏழுமலையானுக்கு அணிவிக்கும் மலர்மாலைகளின் அளவு குறைவாக உள்ளது; நெய்வேத்திய பிரசாதங்கள் தயாரிக்க, கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் தரமும் குறைவாக உள்ளது. மேலும் தீவிர சோதனை நடத்தி, 10 நாட்களுக்குள் ஆந்திர அரசிற்கு அறிக்கை சமர்ப்பிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X