பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், வெளிநாட்டுப் பயணியர் சுற்றுலா களைகட்டுகிறது.மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பிற்கு பின் அங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் துவங்கினர். இந்நிலையில் தற்போது அங்கு வெளிநாட்டு பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளனர்மாமல்லபுரத்தில் கட்டப் பட்டுள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், வெளிநாட்டுப் பயணியர் சுற்றுலா களைகட்டுகிறது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பிற்கு பின் அங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் துவங்கினர். இந்நிலையில் தற்போது அங்கு வெளிநாட்டு பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளனர்latest tamil newsமாமல்லபுரத்தில் கட்டப் பட்டுள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால சிற்பங்களை காண, பயணியர் வருகின்றனர்.இங்குள்ள கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரைகளை, உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.


latest tamil newsவெளிநாட்டுப் பயணியர் ஆண்டு இறுதியில் இங்கு குவிவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஆண்டு இறுதியில் கடுங்குளிர் நிலவும். இக்காலத்தில், இயல்பு தட்பவெப்ப சூழல் நிலவும் இந்தியாவிற்கு, அந்நாட்டினர் சுற்றுலா வருவர். தற்போதும், வெளிநாட்டுப் பயணியர் சுற்றுலா துவங்கி, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டினர் இங்கு வருகின்றனர். பயண முகவர்கள் மூலம் வரும் பயணியர், குழுக்களாக குவிகின்றனர். மாமல்லபுரத்தில் தற்போது, இப்பயணியர் குவிந்து சுற்றுலா களைகட்டுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201915:35:42 IST Report Abuse
RM எப்பவும் வர்ற கூட்டம்தான். சீசன் செப்டம்பர். சீன பிரதமர்வந்துபோய் 15 நாள்கூட ஆகல. அதுக்குள்ள எல்லாரும் டிக்கட் எடுத்து ஓடிவர்றாங்களா? வெளிநாட்டிலிருந்து, பயண ஏற்பாடுக்கே நாட்கள் அதிகம் வேண்டும்.காக்கை உட்கார பனம்பழம்விழுந்த கததான்
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-201913:29:32 IST Report Abuse
Yaro Oruvanஎன்ன புகைச்சல் ஜாஸ்தியா இருக்கு.. இருக்காதா பின்னே.. எம்புட்டு வயித்தெரிச்சல் அடக்குறது.. வலிக்காத மாதிரி எம்புட்டு நாளக்கித்தான் நடிக்கிறது.. நம்ம மாம்ஸுக்கு நாலு ஜெலுசில் ஊத்தப்பம் பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்...
Rate this:
Cancel
19-அக்-201913:23:23 IST Report Abuse
ஆப்பு வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்க்ஜ 600 ரூவா கட்டணமாம்.
Rate this:
Cancel
19-அக்-201911:59:58 IST Report Abuse
நக்கல் எவ்வளவு பெருமைக்குரிய இடம்... மேற்கத்திய நாடுகளாக இருந்தால் இதை அருமையாக பராமரிப்பார்கள்... திராவிட கட்சிகள் ஆட்சியில் இது ஏதோ ஒரு கார்பொரேஷன் மைதானம் மாதிரி ஆகிவிட்டது... எங்கு பார்த்தாலும் நாய்கள்..... தமிழை வைத்து அரசியல் செய்து காசு பார்க்கும் திராவிட கட்சிகளுக்கு தமிழனுக்கு பெருமை சேர்க்கும் பழமையான இந்த இடத்தை பராமரிக்கத் தெரியவில்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X