பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு: மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா?

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருப்புவனம்: 'கீழடியில், ஆறாம் கட்ட அகழாய்விற்கு, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்' என, தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், குழுவினருடன் அகழாய்வு பணியில் ஈடுபட்டார். இதில், கட்டுமான சுவர்களுடன் கூடிய கட்டடம் உள்ளிட்ட

திருப்புவனம்: 'கீழடியில், ஆறாம் கட்ட அகழாய்விற்கு, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்' என, தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.latest tamil newsசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், குழுவினருடன் அகழாய்வு பணியில் ஈடுபட்டார். இதில், கட்டுமான சுவர்களுடன் கூடிய கட்டடம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இரண்டு கட்ட அகழாய்வில், ஏராளமான சான்றுகள் கிடைத்தன.அதன்பின், தமிழக தொல்லியல் துறை, இரண்டு கட்ட அகழாய்வை நடத்தியுள்ளது.

இதில் கிடைத்த பொருட்கள், 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஆறாம் கட்ட அகழாய்வை நடத்த, மத்திய அரசிடம் தமிழக தொல்லியல் துறை விண்ணப்பித்துள்ளது.தற்போது அனுமதி கிடைத்தால், ஜனவரி துவங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடத்த வசதியாக இருக்கும். நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு, மத்திய அரசு தாமதமாக அனுமதி வழங்கியதால், பணிகளும் தாமதமாக தொடங்கின.இதுவரை நடந்த அகழாய்வுகள், குறைந்த கால கட்டத்தில் மட்டுமே நடந்தன.

இம்முறை, தமிழக தொல்லியல் துறை, முன்கூட்டியே, மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவிடம் விண்ணப்பித்து விட்டது.ஐந்தாம் கட்ட அகழாய்வில், இணை இயக்குனர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி தலைமையில், 10 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். ஆறாம் கட்ட அகழாய்வை, கீழடியைச் சுற்றியுள்ள அகரம், மணலுார், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.


latest tamil newsஇதனால், 'கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்' எனவும், தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அருங்காட்சியகம்கீழடியில் நடந்த, ஐந்தாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட, 900 பொருட்கள் கண்டறியப்பட்டன.'இந்தப் பொருட்களை, தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; அதை கீழடியிலேயே நடத்த வேண்டும்' என, பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழக தொல்லியல் துறை, அக்., 23ல் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிட்டுள்ளது.இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'கீழடி நாகரிகம், உலக அளவில் பெயர் பெற்றுள்ள நிலையில், பலரும் கீழடியை காண, ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். 'அகழாய்வு பொருட்களை, மதுரையில், மக்ளின் பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக, கீழடியிலேயே வைக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
19-அக்-201912:29:38 IST Report Abuse
Raghuraman Narayanan நிச்சயம் கிடைக்கும். BJP மேலிடம் இப்போது நன்கு தமிழர்களின் ஈடுபாட்டையும் நம்பிக்கைகளையும் புரிந்து கொண்டு உள்ளனர். அதை வைத்தே அவர்கள் தங்களது வோட்டு வங்கியை அதிகரிக்க முயற்சி செய்வர்.
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
19-அக்-201910:22:49 IST Report Abuse
Palanisamy T கீழடி நாகரீகம் நம் தொன்மையையும் பழமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது காலச் சக்கரத்தில் அழிந்துப் போன நாகரீகங்கள் பல இருக்குமிடம் தெரியாமல் மறைந்துப் போன பல மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறுகள் ஆனால் தமிழ்மட்டும் நம்மை இவ்வளவுக் காலமாக இன்னும் அழியாமல் தாய்ப் போன்று காப்பாற்றிக் கொண்டு வருகின்றது அந்த தமிழ் அன்னை மீது நம்பிக்கைக் கொள்வோம் வணங்குவோம். நாளைய நம் மக்களுக்கு இந்த தமிழன்னையை, தமிழை நாம் நல்லபடியாக கொண்டுச் சேர்ப்பது நம்கடமை. வாழ்க வளர்க தமிழ்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
19-அக்-201906:24:42 IST Report Abuse
blocked user தமிழ் மிகத்தொன்மையான மொழி. கல்வெட்டுக்கள் சீனா, பிலிப்பீன்ஸ் போன்ற இடங்களில் கூட கண்டுபிடித்து இருக்கிறார்கள். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழனின் கால் பதித்த இடங்கள்தான் அதிகம். இதை வெறும் 2000 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஒரு நாகரீகம் என்று வகைப்படுத்துவது மேற்கத்திய அடிமைத்தனம். விரிவாக இன்னும் பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
19-அக்-201911:29:03 IST Report Abuse
 Ganapathy Subramanianமிகவும் சரி. இதை வைத்து அரசியல் செய்பவர்கள் தான் நாட்டில் அதிகமாய் இருக்கின்றனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X