சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,000 கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement
1000,கருக்கலைப்பு,போலி டாக்டர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 1,000த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து, கைதாகி, ஜாமினில் வந்து, மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்ட, போலி பெண் டாக்டரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை, வேங்கிக்காலைச் சேர்ந்தவர், ஆனந்தி, 47; பத்தாம் வகுப்பு வரை படித்து, டாக்டர்களிடம் உதவியாளராக இருந்து, பேன்சி ஸ்டோர் ஆரம்பித்தார். அதனுள் ரகசிய அறை அமைத்து, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தார்.

கடந்தாண்டு போலீசார், இவரை கைது செய்து விசாரித்ததில், 1,000த்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரிந்தது. அவரது பேன்சி ஸ்டோருக்கு சீல் வைத்து, அங்கிருந்த ஸ்கேன் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தற்போது, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஆனந்தி, வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, தனிப்படை போலீசார், நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில், அவரை கைது செய்யச் சென்றனர்.

அவர், அங்கிருந்து தப்பி, திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அவரது வீட்டில் பதுங்கினார். போலீசார் அவரை, நேற்று காலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இவர், மூன்று முறை கைதானவர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
19-அக்-201912:14:09 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இவர் ஒரு கட்சி ஆரம்பித்து இதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-அக்-201909:12:56 IST Report Abuse
A.George Alphonse இது போன்ற உயிர் கொல்லி ரத்த காட்டேரிக்கு ஜாமீன் கொடுத்து அவளை மீண்டும் மீண்டும் இது போன்ற மகா பாதக செயலில் ஈடுபட செய்வது தர்மமும்,நீதியும் அல்ல. இவள் செய்த மகா மகா பாதக செயலுக்கு தகுந்த தண்டனையை இவ்வுலகிலும்,மறுஉலகிலும் தவறாமல் அனுபவிப்பாள்.
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201908:52:24 IST Report Abuse
ருத்ரா ஆயிரம் உயிர் கொன்ற அபூர்வ போலி பெண். ஜாமீனில் வந்தும் தொழிலை தொடங்கிய போலி. என்கவுண்டரில் தீர்க்கப் பட வேண்டியவள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X