பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: 'வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில், இன்று(அக்.,19) கனமழையாக கொட்டும்; மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. அன்று முதல் வங்க கடலில், வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியால், வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டியது. இன்று, ஏழு மாவட்டங்களில், கன மழை கொட்டும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.





சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை கொட்டும். வரும், 21, 22ம் தேதிகளில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், அனேக இடங்களில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர், 1 முதல், இதுவரை சராசரியாக, 9 செ.மீ., மழை பெய்ய வேண்டும்; 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Saravanakumar - CHENNAI,இந்தியா
19-அக்-201914:08:39 IST Report Abuse
P Saravanakumar மழை பெய்யுது பெய்யுதுனு சொல்லி சொல்லியே மழை வராம பண்ணிடுவாங்க போல. மழை பெய்யட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
19-அக்-201913:30:11 IST Report Abuse
Harinathan Krishnanandam வறட்சி நிவாரணம் போய் வெல்ல நிவாரணம் அடிக்குது ஜாக்போட் அரசு அலுவலர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201911:12:13 IST Report Abuse
padma rajan சென்னை கடலோர மாவட்டங்களில் அடங்காது போலும். சுரீர் வெயில் அடிக்கிறது. சும்மா மழை மழை என்று புலம்பினால் இப்படித்தான் ஏமாற்றும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X