பொது செய்தி

தமிழ்நாடு

அகழ்வாய்வு பொருட்களுக்கு மதுரையில் அருங்காட்சியகம்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
மதுரை, கீழடி, அருங்காட்சியகம்,

திருப்புவனம்: கீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து மதுரையில் தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கீழடியில் நடந்த 5ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை வைத்து தற்காலிகமாக பார்வையாளர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அதனை கீழடியிலேயே நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக தொல்லியல்துறை அக். 23ல் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தற்காலிக அருங்காட்சியகம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கீழடி நாகரீகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ள நிலையில் பலரும் கீழடியை காண ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். தற்போதைய நிலையில் இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி, கால்வாய் உள்ளிட்டவற்றை மட்டும் கண்டு செல்கின்றனர். அகழாய்வு பொருட்களை காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. இந்நிலையில் மதுரையில் மக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பதிலாக கீழடியிலேயே வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201907:48:23 IST Report Abuse
ஆப்பு சீரழிஞ்சு கெடக்கிற மதுரையை ஒண்ணும் செய்ய மாட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X