பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (101)
Advertisement

சண்டிகர் : 2014 ல் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.


அரியானாவில் மகேந்திர கர் எனுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். ராகுல் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. கோடீஸ்வர தொழிலதிபர்களை மேலும் வளர்ப்பதே தான் மோடியின் நோக்கம். 2014ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் புகழ் பெற்ற 2 அல்லது 3 பொருளாதார நிபுணர்களை சந்தித்துப் பேசினேன். அப்போது ஏற்பட்ட வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நூறுநாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடியும்தான் முக்கியக் காரணங்களாக இருந்தன.

லோக்சபா தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் நீதி திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும். வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டிருக்கும். லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரியானாவில் ஆட்சியை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பா.ஜ., அரசு ஏழைகளின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து, கோடீஸ்வரர்களிடம் அளிக்கிறது. 5 மாநிலங்களில் விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்தது. அது பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. உயர்த்தி உள்ளது. மக்களின் கவனத்தை மோடி திசை திருப்புகிறார் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-201910:29:37 IST Report Abuse
Yaro Oruvan உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதற்கு பல காரணங்கள்.. ஆனால் நமது அமுல் இளைஞ்சருக்கு கண்ணில் தெரிவதெல்லாம் மோடி மட்டுமே.. கண்ணுல வெரல வுட்டு ஆட்டுனா பாவம் பப்புவும் எம்புட்டு நாளக்கித்தான் வலிக்காதமாதிரி நடிப்பாரு..
Rate this:
Share this comment
Cancel
Venkat N -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201922:12:39 IST Report Abuse
Venkat N புரட்சி தலைவர் பாடிய பாடல் நியபகம் வறுத்து,""பயித்திய காரர் பத்தும் சொல்வார் போகட்டும் விட்டு விடு "",வெற என்ன சொல்ல இந்த லூ....பத்தி ..
Rate this:
Share this comment
Cancel
Venkat N -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201922:08:34 IST Report Abuse
Venkat N படிச்ச பொருளதார மெதய கைபுல்லயா ஆட்டி படச்ச கட்டி அதுக்கு தல கிடயது,வாலு மட்டும் தான் ஆடுது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X