கடும் நிதி நெருக்கடி : மூடப்பட்ட ஐ.நா.,

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (29)
Advertisement

நியூயார்க் : கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐநா.சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என ஐநா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா.சபையின் பட்ஜெட்டிற்கு உங்கள் நாடு தனது நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐநா.சபையில் 131 நாடுகளில் இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன.
இதர நாடுகள் முழுத்தொகையை செலுத்தவில்லை. இதனால் ஐநா.சபைக்கு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஐநா. தெரிவித்துள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் அலுவலகம் செயல்படாது என ஐநா தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
19-அக்-201919:05:17 IST Report Abuse
spr " 193 நாடுகளைக் கொண்டிருக்கும் ஐநா.சபையில் 131 நாடுகளில் இந்தியா உள்பட 35 நாடுகள் மட்டுமே முழுமையாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தியுள்ளன." இதுதான் சிறப்பான செய்தி. இந்திய பொருளாதாரம் மந்தமாக இருந்தால், இது சாத்தியமா? இந்தியா முன்னேற்றப் பாதையில்தான் தொடர்கிறது இந்த இந்தியா உள்பட 35 நாடுகள் பாராட்டப்பட வேண்டியவை மல்லையா போல வாங்கிய கடந்த திருப்பித் தராத இதர நாடுகளில் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இருக்கிறதா என்று சொல்லியிருக்கலாமே இது குறித்துப் பொருளாதார பேதைகள் என்ன சொல்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-அக்-201918:16:24 IST Report Abuse
ஆரூர் ரங் உலகப்பொருளாதாரத்தின் பிரதிபலிப்புதான் இது. 130 கோடி மக்களத்தொகையுள்ள இந்தியாவின் ஐந்து சதவீத வளர்ச்சி ஆச்சயம்தான் .மேலும் பல நாடுகள் ஐ ந சபை தன் இஷ்டத்துக்கு வளைந்துகொடுக்கவேண்டுமென விரும்புகிறார்கள் .இது நடக்காத காரியம்
Rate this:
Share this comment
Cancel
we -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201917:46:01 IST Report Abuse
we மேலை நாடுகளில் ஐ.நா.சபை அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலகங்களில் வேலை செய்யும் கேரளர்கள் வேலை சரிவர செய்யாமல் அனுபவித்த வசதிகள் நம்ம ஊர் அதிகாரிகளைவிட அதிகம் அளவூக்குமீறிய .இண்டர்நேஷனல் பள்ளி, பல்கலைக்கழகம் படிப்புசலுகை, வரிச்சலூகை, பயணச்சலூகை, மருத்துவ சலூகை, இந்தியாவிற்கு கண்டையினரில் சாமான் ஒய்வின் போது, சலுகைவிலையில் உணவுபலசரக்கு கடை ஐ.நா வளாகத்தில். இதுசாதாரண கிளர்க் லெவல் வசதி கண்கூடாக கண்டது.சம்பளம் அந்த நாட்டு கரன்சியில். ஓய்வூதியமூம் அப்படியே.சாதாரண நிலை ஊழியர் இப்படி என்றால் உயர்நிலை வசதி ஊகித்து கொள்ளவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X