பொது செய்தி

இந்தியா

பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியருக்கு கல்தா?

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், வேலைபார்க்கும், 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2018 - 19ம் கல்வியாண்டில், மாநில அரசின் கணக்குப்படி பெண்கள் மட்டுமே படிக்கும் 1,019 பள்ளிகளும், இருபாலர் மட்டுமே படிக்கும் 68,910 பள்ளியும் உள்ளன. இந்த பள்ளிகளில் 3.82 லட்சம் ஆசிரியர்கள்
பெண்கள் பள்ளி, ஆண் ஆசிரியர்கள், கல்தா,

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், வேலைபார்க்கும், 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 - 19ம் கல்வியாண்டில், மாநில அரசின் கணக்குப்படி பெண்கள் மட்டுமே படிக்கும் 1,019 பள்ளிகளும், இருபாலர் மட்டுமே படிக்கும் 68,910 பள்ளியும் உள்ளன. இந்த பள்ளிகளில் 3.82 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் விகிதம் 2:1 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 69,929 பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆண் ஆசிரியர்களால், மாணவிகளுக்கு பாலியல் தொந்தவு கொடுக்கும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.


latest tamil news


இதனையடுத்து, பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில், பணிபுரியும் 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற்று கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது பற்றி மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் கூறுகையில், பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் மட்டும் நியமிக்கப்படுவார்கள். 50 வயதுக்கு மேல் உள்ள ஆண் ஆசிரியர்கள் தேவை அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். பெண்கள் பள்ளியில் படிக்கும் ஆண் ஆசிரியர்கள் குறித்து விவரம் கேட்டுள்ளேன். போதிய ஆசிரியர்கள் இருக்கும்பட்சத்தில் அரசின் முடிவு அமல்படுத்தப்படும் என்றார்.

இது தொடர்பாக யுனிசெப் அமைப்பில் பணிபரிந்த கேபி கோத்தாரி கூறுகையில், ''மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து அரசு ஆராயவில்லை. அதற்கு தீர்வு குறித்து யோசிக்கவில்லை. 1,019 பள்ளிகளில், 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற்று கொள்வது சாதாரண விஷயம். ஆனால், எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவோம்'' என்றார்

ராஜஸ்தான் பல்கலையில் சோசியாலாஜி துறை தலைவர் ராஷ்மி ஜெயின் கூறுகையில், '' பெண்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடப்பதாக அமைச்சர் கூறுகிறாரா? பெண்கள் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் உருவாக்கும் செயல் போன்று உள்ளது'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் அல்போன்சுக்கு "புனிதர்" பட்டம் தரலாம்
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
19-அக்-201917:54:16 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இது உண்மையாக இருக்குமானால், பிற்போக்குத்தனமான முடிவு இது. சபலப்படும் ஆசிரியர்கள் மீது கடும் தண்டனை எடுக்கவேண்டும். பெண் ஆசிரியர் மேல் எந்த குற்றச்சாட்டும் வந்தது இல்லையா. ஒருதலை பட்சமாக முடிவு எடுக்காமல் , 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் ஆசிரியர்களை ஆண்கள் படிக்கும் பள்ளியில் பணியமர்த்தக்கூடாது
Rate this:
Cancel
19-அக்-201917:09:55 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வயது முக்கியம் அல்ல நடத்தைத்தான் முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X