கொட்டும் மழையில் சரத்பவார் பிரசாரம்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement

மும்பை : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவார், நேற்று கொட்டும் மழையில் நனைந்தபடி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்






மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் அக்.,21 அன்று நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் சாட்ரா பகுதியில் கொட்டும் மழையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு சரத்பவார் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவின் சாட்ரா தொகுதியில் தவறான வேட்பாளரை தேர்வு செய்து தவறி செய்து விட்டோம். அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தவறை சரி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சாட்ராவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், வயதானவரும் அக்.,21 க்காக காத்திருக்கிறார்கள்.





தேசிய வாத காங்.,க்கு வருண பகவானே ஆசி வழங்கியதால் தான் மழை கொட்டுகிறது. அவரின் ஆசியால் மகாராஷ்டிராவின் சாட்ரா மாவட்டத்தில் இந்த தேர்தலில் அதிசயம் நிகழ போகிறது. அந்த அதிசயம் அக்.,21 துவங்க உள்ளது என்றார். மழையில் நனைந்தபடி சரத்பவார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் #SharadPawar என்ற ஹெஷ்டாக்கும் உருவாக்கப்பட்ட டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
19-அக்-201921:31:16 IST Report Abuse
Charles CBI அந்த கூட்டுறவு ஊழல் குற்ற பத்திரிக்கை எப்போது கோர்ட்டுக்கு கொண்டு வரப்போகிறது?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-அக்-201917:16:14 IST Report Abuse
RajanRajan ஊழல் உச்சந்தலையில் ஏறி குட்ட வரும்போது இந்த கொட்டும் மழை எல்லாம் இந்த ஆளுக்குள் துச்சம். இயற்கையின் சீரமைப்பில் இவன் காணாமல் போயிடுவான்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-அக்-201914:13:43 IST Report Abuse
A.George Alphonse பதவி படுத்தும் பாடு. கொட்டும் மழையிலும் இந்த வயதான காலத்தில் தேர்தல் பிரச்சாரம்.
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
19-அக்-201916:11:47 IST Report Abuse
JIVANஎன்ன ஒரு கண்டுபிடிப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X