பொது செய்தி

இந்தியா

மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019
Share
Advertisement
ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் விளாசினார்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி, 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது.இந்திய அணியில்

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் விளாசினார்.



latest tamil news



இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி, 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது.


latest tamil news



இந்திய அணியில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷபாஸ் நதீம் அறிமுகமானார். தென் ஆப்ரிக்க அணியில் மார்க்ரம், பிலாண்டர், டி புரூய்ன், முத்துசாமி, மஹராஜ் நீக்கப்பட்டு ஹம்சா, கிளாசன், லிண்டே, லுங்கிடி, பீட் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


ரோகித் சதம் விளாசல்


இந்திய அணிக்கு ரபாடா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' மயங்க் அகர்வால் (10), புஜாரா (0) வெளியேறினர். கேப்டன் கோஹ்லி (12) நிலைக்கவில்லை. பின்இணைந்த ரோகித் சர்மா, அஜின்கியா ரகானே ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பொறுப்பாக ஆடிய ரகானே தன்பங்கிற்கு அரைசதமடித்தார். அபாரமாக ஆடிய ரோகித் டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதமடித்தார்.


latest tamil news



முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ரோகித் (117), ரகானே (83) அவுட்டகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X