அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவிற்கு ஓட்டு: ராமதாஸ் வேண்டுகோள்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது; அதிமுக ஆட்சிப் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்பட்டு விடாது. அதேநேரத்தில் தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இரு தொகுதிகளின்
பா.ம.க., ராமதாஸ், பாமக, அதிமுக,அ.தி.மு.க., தி.மு.க., திமுக

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது; அதிமுக ஆட்சிப் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்பட்டு விடாது. அதேநேரத்தில் தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் பார்க்கப்பட வேண்டும்.
மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் அதிமுக - பாமக கூட்டணி தான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெற்றால், அதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தான்.

அதிமுக வெற்றி பெற்றால் இரு தொகுதிகளிலும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாறாக, திமுக வெற்றி பெற்றால் நிலங்களை அபகரிப்பது, கடைகளில் புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல்கள் தான் நடக்கும். இவற்றை, மனதில் கொண்டு, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர இரு தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam Rajarajan - Erode,இந்தியா
19-அக்-201922:20:07 IST Report Abuse
Sam Rajarajan ஆசை தோசை அப்பளம் வடை
Rate this:
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
19-அக்-201921:47:52 IST Report Abuse
MIRROR அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னா நாங்க போடனும். இது என்ன மாதிரியான அரசியல்னு சொல்லுங்களேன்.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-அக்-201920:26:20 IST Report Abuse
s.maria alphonse pandian நிலைப்பாடுகளை அடிக்கடி முற்றிலும் மாற்றிக்கொண்டதால் தமிழக மக்களின் உள்ளங்களில் இடம் பெறாமல் போன மதிமுக போலதான் இந்த பாமகவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X