இந்திய- அமெரிக்கா வர்த்தகம் உயர்கிறது

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement

வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதியில் இந்தியா - அமெரிக்கா இடையிலான, பாதுகாப்புத்துறை வர்த்தகம் 18 பில்லியன் டாலரை எட்டும் என பெண்டகன் கூறியுள்ளது.






இது தொடர்பாக, பாதுகாப்புத்துறையின் கொள்முதல் துணை செயலர் எலன் எம்.லார்ட் கூறுகையில், இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவம் - ராணுவம் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவை பலப்படுத்தும் அதே நேரத்தில், இந்தியாவுடனான கூட்டணியை வலுப்படுத்தவும் விரும்புகிறோம். 2008 ல் பூஜ்யம் ஆக இருந்த, இருதரப்பு பாதுகாப்புத்துறை வர்த்தகம், இந்த ஆண்டு இறுதியில் 13 பில்லியன் டாலர் ஆக இருக்கும். அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.





இந்தியா - அமெரிக்கா தொழில்நுட்ப மற்றும் வர்த்தக குழுவானது, ராணுவ தளவாடங்களின் மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான வாய்ப்புகளை காணவும், அறிவியல் மற்றும் தொழிலநுட்ப திட்டங்களில் ஒத்துழைக்கவும் மற்றும் ராணுவ உறவை மேலும் மேம்படுத்துவதற்கான தேவையான கொள்கை மாற்றங்களை கூட்டாக ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவின் 9வது கூட்டம், அடுத்த வாரம் டில்லியில் நடைபெற உள்ளது. பென்டகன் இணை பாதுகாப்பு தலைவர் மற்றும் இந்திய பாதுகாப்பு துறை இணை செயலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-201918:16:02 IST Report Abuse
ஆப்பு அவிங்க இந்தியாவுக்குச் செய்யும் ஏற்றுமதி அதிகமாயிடிருக்கு. இங்கேருந்து அங்கே போறதெல்லாம் அதிகமானாத்தான் நமக்கு நல்லது.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
19-அக்-201920:45:21 IST Report Abuse
VELAN Sசரியா சொன்னீங்க . சில பேர் , அதிக செலவு என்று , ஒழுங்கா சாப்பிட மாட்டானுக , அஆனாக்க , வீட்டுக்கு வீடு நிறைய காஸ்டலி டீவீ வாங்குறேன் காஸ்டலி ப்ரிட்ஜ் வாங்குறேன் , , அதை வாங்குறேன் , இதை வாங்குறேன் என்று வாங்க்கி போடுவார்கள் , அப்புறம் , வாங்குனவற்றையெல்லாம் அனுபவிக்குமுன்னே மேலே போய் சேர்வார்கள் . அதுமாதிரி , இந்தியனுக்கு வேலை வாய்ப்பு சரியா இல்லை , சரியா சாப்பிட வழியில்லை , ஆனாக்க , கோடி கோடியா பணம் கொடுத்து ராணுவ தளவாடங்களை வாங்க்கி போடுவாங்க , வாங்கி போட்டு என்ன செய்ய , அதை உபயோகப்படுத்தாமல் துரு பிடிக்க விட வேண்டியதுதான் . நம்ம நாட்டு நிலைமையை பாருங்க ....
Rate this:
Share this comment
MUM MUM - Trichy,இந்தியா
19-அக்-201921:29:11 IST Report Abuse
MUM MUMமேன்மிகு velan அய்யா அவர்களே...என் எவ்ளோ கஷ்டப்பட்டு விளக்கமோ? ஐம்புலன்களையும் அடக்கிக்கொன்னு இலகுவா சொல்லலாமே? இந்தியனுக்கு வேலை இல்லையின்னா வீடு வாசல் எதுக்கு...எல்லாம் டாரவின் சொன்ன மாதிரி வாலீலாட்டியும் மரத்துல ஏறி ஒக்கர்ந்துக்கலாமே? நாலு செவுரு எதுக்கு? கதவு ஜன்னல் எதுக்கு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X