எதிர்த்து குரல்: ஒடுக்கும் பாக்., ராணுவம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement
Pakistan, silence, army, raids, terror charges, பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள்,

இஸ்லாமாபாத் : பாலியல் புகார், அடக்குமுறை குறித்து புகார் தெரிவிப்பவர்களை, பயங்கரவாத புகார் தெரிவித்தும், ரெய்டு நடத்தியும் அடக்க முற்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் மீது புகார் எழுந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது இஸ்மாயில். ஓய்வு பெற்ற உருது ஆசிரியர். கம்யூனிச சித்தாந்தம் கொண்ட இவர், ஆசிரியராக பணிபுரிந்த போது, ஆப்கனில் ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா உதவியுடன் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், அவர் மீது ராணுவத்திற்கு கோபம் ஏற்பட்டது. பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், ஆப்கன் சென்று வந்து பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தார். ஆப்கன் எல்லை ஒட்டியுள்ள கைபர் பக்துன்குவா பகுதிகளில், தலிபான் பயங்கரவாதிகளின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கோபம் அடைந்த பயங்கரவாதிகள், முகமது வீட்டை அடித்து நொறுக்கினர்.

தற்போது, முகமது, மனைவி இருவரும், மகள் குலாலயி இஸ்மாயிடம் இருந்து பணம் வாங்கி, பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர். இந்த வழக்கில், இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குலாலயியும் ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். இதனால், அவரை ராணுவம் கண்காணிக்க துவங்கியது. இதனால், பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். கடந்த வாரம், அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
எல்லை பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி, லட்சகணக்கான மக்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயிரகணக்கான இளைஞர்கள் எங்கு உள்ளனர் என்ற விவரம் பெற்றோருக்கு தெரியவில்லை. எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறலை எதிர்க்கும் பஷ்துன் இயக்கத்திற்கு முகமது மற்றும் குலாலயி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக குலாலயி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக முகமது கூறுகையில், கடந்த 17 ல், சீருடை அணியாத ராணுவ வீரர்கள் வீட்டிற்கு வந்து சோதனை நடத்த முயன்றனர். பேச வேண்டும் எனக்கூறி வெளியே வர உத்தரவிட்டனர். ஆனால் மறுத்துவிட்டோம். ஒரு மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பி சென்றனர். வஜீரிஸ்தானில், பெண்களையும், சிறுமிகளையும், ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் எப்படி பாலியல் துன்புறுத்தல் செய்தனர் என்பதை அப்பகுதி பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதே எனது பணி என குலாலயி கூறுவார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனக்கூறி, பஷ்தூன் இயக்கத்தினரை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் கடுமையாக துன்புறுத்தும். தலிபான் பயங்கரவாதிகளை 'நல்லவர்கள்' மற்றும் 'கெட்டவர்கள்' என பாகிஸ்தான் அரசு பிரித்து பார்த்து வருகிறது என்றார். குலாலயி இஸ்மாயிலக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தங்கள் நாட்டின் சொத்துகளாக கருதும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டிப்பது குறித்து பாகிஸ்தான் ராணுவம் இன்னும் முடிவு செய்யவில்லை. முக்கியமாக, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதால், அதனை, தனது மிகப்பெரிய சொத்தாக பாகிஸ்தான் ராணுவம் கருதி வருகிறது.
தங்கள் மீதான புகார் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் கூறியதாவது: அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2000 ம் ஆண்டுமுதல், பாகிஸ்தான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் குறைவாக இருந்த போதிலும், மலைப்பகுதிகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தோம். அந்த பகுதிகளில் மனித உரிமை மீறல் ஏதும் நடக்கவில்லை. அங்கு, மக்கள் தெரிவித்த புகார்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், குலாலயி இஸ்மாயில், முகமது மற்றும் பஷ்துன் இயக்கத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பாகிஸ்தான் பதிலை மறுத்துள்ளனர்.
மனித உரிமை ஆர்வலரும், பெண்கள் இயக்க நிர்வாகியுமான புஷ்ரா கோகர் கூறுகையில், ராணுவத்தால், ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இன்றும் அதனை சொல்வார்கள். அவர்கள் இன்னும் பயத்தில் இருந்து மீளவில்லை. அந்த பகுதியில் வசித்த பெண் ஒருவர் வீட்டிற்கு, ஆண் யாரும் இல்லாத போது, பாதுகாப்பு படையினர் அடிக்கடி சென்று சட்ட விரோதமாக சோதனை செய்ததுடன், குடும்பத்தினரை கொடுமைப்படுத்தியுள்ளனர். ராணுவம் வந்து சென்ற போது எல்லாம், அந்த பெண், துண்டு சீ்ட்டு ஒன்றில் கோடு போட்டு வைத்துள்ளோர். இதனை எங்களிடம் காண்பித்த அவர், வீடியோகாவும் காண்பித்தார் என்றார்.

ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர், பாலியல் புகார் தொடர்பாக நேரடியாக எந்த பதிலும் அளிக்காவிட்டாலும், மனித உரிமை மீறல் பிரச்னையை மறுத்துவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19-அக்-201921:23:41 IST Report Abuse
elakkumanan இது எல்லாமே உண்மை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், வலுத்தவன் வைத்ததே சட்டம் என்பது இன்றைய பாகிஸ்தானின் நிலை. ஒரு அழிவு ஏற்பட்டு பின், திருந்த வாய்ப்பு ஏற்படும். ஆனால், விழுதுகள் மீதி இருந்தால், மீண்டும் அதே திசை, அதே பயணம், அதே முடிவு. நாளும், நேரமும் மாறும். மற்றபடி, இது தொடர்வதற்கே வாய்ப்பு அதிகம். மொத்தத்தில், மாறல் ஆப் தி ஸ்டோரி பாதையும் ,இலக்கும் முக்கியம். இலக்கு முக்கியமென்றாலும், பாதையே மிக முக்கியம். நேர் பாதை , நேர் இலக்கிற்கு இட்டு செல்லும். பாகிஸ்தானில், பாதையும் தவறு, இலக்கும் இல்லை, எனவே, அழிவே சர்வ நிச்சயம். அந்த மதத்தினர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். காலம் பதில் சொல்லும். மிக விரைவில், அழிவிற்கான விசையை அவர்கள் அழுத்துவார்கள்.............. அது அணு ஆயுதமாகவோ, ராணுவா ஆட்சியாகவோ , பந்துவீச்சாளரின் தலைமறைவாகவோ இருக்கலாம். ......... பார்க்கலாம். கடந்தாலும், உண்மை என்பது மாறாதது.
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201919:22:40 IST Report Abuse
Ganesan Madurai அமெரிக்காவை எதிர்த்த கபோதி பக்கி முஸ்லிம் கம்யூனிஸ்ட் கடைசீல அமெரிக்காவுல அடைக்கலம் கேட்ட கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-201918:52:42 IST Report Abuse
Rajan விடப்பா, சூசை பக்கிஸ்தான் ஜனதிபதி ஆனவுடன் எல்லாம் அமோகமா நடக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X