காங்., ஆட்சியில் குண்டு வைத்தவர்கள்; எங்கள் ஆட்சியில் மடிகிறார்கள்; மோடி

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (26)
Advertisement

ரிவாரி: காங்கிரஸ் ஆட்சியில் வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள் இப்போது எங்கள் ஆட்சியில் அவர்களது வீட்டுக்குள்ளேயே கொல்லப்படுகிறார்கள் என அரியானாவில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.






சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இன்று பிரதமர் அரியானாவின் ரிவாரி பகுதியில் நடந்த பிரசாத்தில் பேசியதாவது: நாங்கள் நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.
கடந்த ஆட்சியை விட தற்போது இந்திய பாதுகாப்பு ஸ்திரமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு தற்போது வலுப் பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் இப்போது கடற்படையில் இது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதனால் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் அவர்களது வீட்டுக்குள் புகுந்து கொன்று வருகிறோம்.





கடலோர பாதுகாப்பு இப்போது வலுவாக உள்ளது. ரபேல் போன்ற சிறப்பான ஆயுதங்கள் வாங்கி உள்ளோம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள் சிலர் தற்போது உலக நாடுகளின் உதவியை நாடி நிற்கின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கடும் நடவடிக்கையால் முன்னேற்றம் ஏற்படுகிறது. 370 என்ற போர்வையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தற்போது அடக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
20-அக்-201901:36:13 IST Report Abuse
ashak என்ன தலை, தங்கள் ஆட்களையே குற்றவாளின்னு சொல்றாரு?
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
19-அக்-201923:50:27 IST Report Abuse
Rajas குண்டு வைத்தவன் எல்லாம் வழக்கம் போல் ஓடி விட்டான். மடிந்தவன் எல்லாம் விவசாயிகள், வேலை கிடைக்காதவன், கார்ப்பரேட்டுகள் பிடியில் சிக்கியவன் தான்.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-அக்-201923:36:30 IST Report Abuse
வல்வில் ஓரி தெண்டம் ..அது என்ன நேத்து கூட..ஹாஹாஹாஹா.. எல்லோரும் இங்க வந்து இதை எல்லாமாடா சொல்றாய்ங்க? கருமம்..கருமம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X