சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கொள்ளை: சொகுசு வேன் பறிமுதல்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட, அதிநவீன சொகுசு வேன், மதுரை, வாடிப்பட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த, ஜன., 26, 27ம் தேதிகளில், விடுமுறையை பயன்படுத்தி, திருச்சி 'நம்பர் 1 டோல்கேட்' அருகே உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு, 470 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, நான்கு தனிப்படை போலீசார், பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள, புதுக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 28, என்பவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், 'லலிதா ஜுவல்லரி' கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ், முருகன், கணேசன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது, தெரிய வந்தது.

திருவாரூர் முருகன் கூட்டாளியான கணேசனிடம் நடந்த விசாரணையில், பல்வேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த கும்பல் அவர்கள்தான் எனவும் தெரிய வந்தது. சமயபுரம் போலீசார் கணேசனை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது, வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், கணேசன் மூலம், மதுரை , திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலரிடம் விற்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் அதிநவீன சொகுசு பஸ் ஒன்றையும் வாங்கியுள்ளனர். அந்த வாகனத்தின் மூலம் கொள்ளையடிக்கவும் செய்தனர்.
மதுரை சமயநல்லூரை சேர்ந்த கணேசன் என்பவர் கார் டிரைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வேனில், காஸ் சிலிண்டர், எடை போடும் இயந்திரம் , கடப்பாறை கயிறு ஆகியவை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-அக்-201921:13:28 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த வேனில்தான் ஊழல் கட்சி தலைவர் பல நாட்கள் பயணம் செய்துள்ளாராமே? உண்மையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X