அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி நில மூலாதாரம்; ஸ்டாலின் தயார்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (40+ 106)
Advertisement

சென்னை:சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி இருக்கும் நிலம் தொடர்பான மூல ஆதாரத்தை காட்ட தயார் , அவ்வாறு காட்டினால் ராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.






'அசுரன்' படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ், இயக்குனர் வெற்றிமாறனை ஸ்டாலின் பாராட்டினார். இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் " பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஆஹா... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று 'முரசொலி' நாளிதழ் அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்" .இவ்வாறு கூறியிருந்தார்.

அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று ஸ்டாலின் கேட்டிருந்தார்.




இந்நிலையில் ராமதாசுக்கு மேலும் ஸ்டாலின் ஒரு சவாலை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டரில்;




நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்! இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!
3/4

— M.K.Stalin (@mkstalin) October 19, 2019

Advertisement




வாசகர் கருத்து (40+ 106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-அக்-201911:54:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni சில லக்ஷம் தள்ளிட்டால் மூலாதாரம் கிடைக்குமே ஐயா மருத்துவரே இதுலே எல்லாம் கரைகண்டகாட்ச்சி திமுக என்று தெரியாத நீறு ஒரு தலீவனா போய்யாபொய்யா பிண்ணாக்கு
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-அக்-201908:49:06 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் //// ராமதாஸ் இந்த அறைகூவலை ஏற்கத்தான் வேண்டும் .......
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-அக்-201923:23:53 IST Report Abuse
வல்வில் ஓரி அட திராவிட கூ.....வைகளா..ஒங்க தலைவன் பஞ்சமி நிலத்தை ஆட்டையை போட்டதுக்கும் ராமதாசு ஓமியோபதி மருத்துவரா இருக்கிறதுக்கும் என்னடா சம்பந்தம்? இவரு ஓமியோ மருத்துவர்ன்னா கட்டுமரம் ஆட்டையை போடலைன்னு ஆயிருமா? என்னங்கடா ஒங்க டிசைன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X