அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள்

Added : அக் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
இடைத்தேர்தல் பிரசார பணி  சொதப்பிய காங். கோஷ்டிகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக, தமிழக காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட, தேர்தல் பணிக் குழுவினரிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால், தேர்தல் பணிகளில், அவர்கள் சரிவர ஈடுபடவில்லை என, புகார் எழுந்துள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியும், நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளுக்கும், தமிழக காங்கிரஸ் சார்பில், நீண்ட பட்டியல் கொண்ட, தேர்தல் பணிக்குழுவினர் நியமிக்கப்பட்டனர். நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவுக்கான மொத்த பணமும், தி.மு.க., தேர்தல் பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளியூர்களில் இருந்து பிரசாரத்திற்கு சென்ற, காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினரை, யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், காங்., தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். சிலர் மட்டும், தங்கள் சொந்த பணத்தை செலவழித்து, சம்பிரதாயத்திற்காக, தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். நாங்குநேரி, விக்கிர வாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், பூத் கமிட்டிகளில் காங்கிரசாரை சேர்க்க, தி.மு.க., தேர்தல் பணிக் குழுவினர் மறுத்து விட்டனர்.
இரு தொகுதிகளிலும், தி.மு.க., பிரமுகர்களை தான், பூத் கமிட்டி பணிகளுக்கு நியமித்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியிடம் விலை போய் விடுவர் எனக்கூறி, காங்கிரசாரை, தி.மு.க.,வினர் ஓரங்கட்டி விட்டனர்.காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களில், இளங்கோவனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், அவர் பிரசாரத்திற்கு செல்லவில்லை. குமரி அனந்தன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் தான், பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நடிகை குஷ்பு, நாங்குநேரி தொகுதியில் மட்டும், சில இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அவரை, விக்கிரவாண்டி தொகுதிக்கு, தி.மு.க.,வினர் அழைக்கவில்லை. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்கள் வசந்தகுமார் ஆகியோர், தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகள் முழுவதையும் கவனித்தனர். மஹராஷ்டிரா மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடப்பதால், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தனி கோஷ்டியாக, தன் ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்தார். அவரை, தி.மு.க., மட்டு மின்றி, காங்கிரசில் உள்ள மற்ற கோஷ்டிகளும் கண்டுகொள்ளவில்லை. நாங்குநேரியில், கோஷ்டி தலைவர்கள் இடையே, சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், தனித்தனியாக பிரிந்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆளுங்கட்சிக்கு இணையாக தேர்தல் பணிகள் நடக்கவில்லை என, காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் சென்றுள்ளது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-அக்-201918:08:37 IST Report Abuse
J.V. Iyer ஆஹா அற்புதம்..கூரை ஏறி கோழி பிடிக்காதவர்கள் இந்த கான்-க்ராஸ் காரர்கள்.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
20-அக்-201911:29:03 IST Report Abuse
TAMILAN இந்த முறையும் தி,மு ,க மற்றும் காங்கிரஸ் சார்பில் தமிழ் பேசும் தெலுங்கர்கள் நிறுத்தப்பட்டார்களா ? . அப்படி என்றால் தமிழ் மாநாட்டில் தமிழர்களுக்கு என்ன அரசியல் உரிமையை தி,மு.க கொடுக்கின்றது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X