எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் பாராமுகம்: பட்டுவாடாவில் கட்சிகள் கச்சிதம்

Updated : அக் 20, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
தேர்தல் ஆணையம் ,பாராமுகம் ,பட்டுவாடா, கட்சிகள், கச்சிதம், election commision, party, money, DMK,  ADMK

எதையும் தடுக்காமல், தேர்தல் ஆணையம் பாராமுகமாக இருந்து விட்டதால், இடைத்தேர்தல் நடக்க உள்ள, இரண்டு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளன.

தமிழகத்தில், இடைத்தேர்தல் என்றாலே, தொகுதி மக்களுக்கு கொண்டாட்டம் தான். அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், இடைத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக மாற்றி விட்டன.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு கட்சிகளும், வேட்பாளர்களை அறிவிக்கும். அதேபோல், தேர்தல் பணிக் குழுவையும் நியமிக்கும். அதில், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் என, அனைவரும் இடம் பெறுவர்.


எந்த பலனுமில்லை



அவர்கள் ஒரு மாதம், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் முகாமிட்டு, வாக்காளர்களுக்கு பணம் வழங்கி, தங்கள் பக்கம் இழுப்பர். இதை தடுக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், எந்த பலனுமில்லை.தற்போது, இடைத்தேர்தல் நடக்க உள்ள, விக்கிர வாண்டி, நாங்குநேரி சட்ட சபை தொகுதிகளிலும், இரு கட்சிகளும், அதே நடைமுறையை பின்பற்றி உள்ளன. இதற்கு முன் நடந்த தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக, சரமாரி புகார்களை கூறுவர்.

இம்முறை, அதுபோல் புகார் கூறாமல், இரு கட்சி யினரும் பரஸ்பரம் புரிதலுடன், பணப் பட்டு வாடாவை கச்சிதமாக முடித்துள்ளனர். நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், பணத்தை வாரி இறைத்துள்ளார். இரு தொகுதிகளிலும், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டுஉள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பணம் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியா குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது; இவையெல்லாம் என்ன செய்தன என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.


நடவடிக்கை



பணப் பட்டுவாடா தொடர்பாக, பொது மக்களிடமிருந்து, எந்த புகாரும் வரவில்லை என்று, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பணம் வாங்குவோர், எவ்வாறு புகார் தருவர்; வழக்கமாக, அரசியல் கட்சியினர் தான், மற்ற கட்சியினர் மீது புகார் தருவர். இப்போது, கட்சியினரும், மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தில், அமைதியாகி விட்டனர்.மேலும், இரு தரப்பும் பணம் கொடுக்க முடிவு செய்ததால், பரஸ்பரம் யாரையும் காட்டி கொடுப்பதில்லை என்ற ஒப்பந்தத்துடன், பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துள்ளனர்.

பணப் பட்டுவாடாவை தடுக்க, எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பயனில்லை என்பதால், இம்முறை தேர்தல் ஆணையமும், பாராமுகமாக இருந்து விட்டது. இரு தொகுதிகளிலும், எவ்வித கெடுபிடியும் இல்லாதது, அரசியல் கட்சிகளுக்கு கொண்டாட்டமாகி விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-201912:20:06 IST Report Abuse
Lion Drsekar லலிதா முருகன் போன்று ஒருவர் மாட்டிக்கொள்வார் அவர் அப்போது கூறுவார் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்று, எப்போதும் போல் மறுப்பு,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X