அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள்

Updated : அக் 20, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
சசிகலா, ஆதரவாளர்கள், அ.தி.மு.க., குழப்பம்

சசிகலா விவகாரம் தொடர்பாக, அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசுவது, அ.தி.மு.க.,வில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வுக்கு போட்டியாக, சசிகலா ஆலோசனைப்படி, அ.ம.மு.க., என்ற கட்சியை, தினகரன் துவக்கினார். லோக்சபா தேர்தலில், அக்கட்சி படுதோல்வியை சந்தித்ததும், அ.ம.மு.க., நிர்வாகிகள், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் ஓட்டம் பிடித்தனர்.தனிக்கட்சி எடுபடாததால், மீண்டும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற, சசிகலா திட்டமிட்டுஉள்ளார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில், அ.தி.மு.க.,வின், 48ம் ஆண்டு விழாவையொட்டி, அ.ம.மு.க., தொண்டர்களுக்கு, தினகரன் எழுதிய கடிதத்தில், 'அ.தி.மு.க.,வை மீட்டெடுப்போம்' என, கூறியுள்ளார்.


அதிர்ச்சி




இதற்கிடையில், சிறையில் உள்ள சசிகலா, விரைவில் வெளிவர உள்ளார். அவரை, மீண்டும் கட்சியில் சேர்க்க, முதல்வர் இ.பி.எஸ்., தரப்பில், ரகசிய பேச்சு நடந்து வருகிறது. இதற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்துள்ளார்; இரு தரப்பினருக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த, சிலர் களம் இறங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதெல்லாம் உண்மையா, இல்லையா என, அ.தி.மு.க.,வினருக்கு தெரியவில்லை. இது தொடர்பாக, அமைச்சர்கள், ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர். இது, அக்கட்சியினரிடம் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.அமைச்சர் ஜெயகுமார், நிருபர்களிடம் கூறுகையில், ''சசிகலா குடும்பத்தினரை சேர்ப்பதில்லை என எடுத்த முடிவில், உறுதியாக உள்ளோம். ஆடு உறவு, குட்டி பகை என்றெல்லாம் கிடையாது,'' என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,''சசிகலா, சிறையிலிருந்து வந்த பின், அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக, முதல்வர் மற்றும் துணை முதல்வர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என்றார்.துணை முதல்வர் பன்னீர்செல்வமும், எதையும் மறுக்காமல், 'கட்சி முடிவெடுக்கும்' என்றே கூறியுள்ளார். இதெல்லாம் தான், கட்சியினரின்குழப்பத்திற்கு காரணம்.

இது குறித்து, மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சசிகலா, சிறையில்இருந்து வருவதற்கு முன்பே, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மூத்த அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சிக்கு வருவதை விரும்பவில்லை.


வாய்ப்பு



அவர்கள் வந்தால், மீண்டும் அடிமைகளாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அவர்கள் வரக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.தினகரனின் தனிக் கட்சி போணியாகாதால், சசிகலா குடும்பத்தினர், எப்படியும் கட்சிக்குள் நுழைந்து விட துடிக்கின்றனர். அதற்கு, பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.

அவர்கள் வருவதை, கட்சியில் உள்ள, அவர்களின் விசுவாசிகளும் விரும்புகின்றனர்.அவர்கள் தான், இப்படி தகவல்களை பரப்பி, குழப்பி வருகின்றனர். சசிகலா குடும்பத்தை சேர்ப்பதாக இருந்தால், கட்சி பிளவுபட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, சசிகலா விவகாரத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வரும் தெளிவான முடிவைஅறிவிக்க வேண்டும் .இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
24-அக்-201918:32:57 IST Report Abuse
oce ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். அந்த மகராஜியை கட்சிக்குள் நுழைய விட்டால் திமுக கை மேலும் ஓங்கும். அந்த அம்மா கருணாநிதி ஆள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X