அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி: உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை

Updated : அக் 20, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
இளைஞர் அணி செயலர் உதயநிதி தலைமையில், புதிதாக, இளம் பெண்கள் அணி உதயமானால், கனிமொழி தலைமையிலான மகளிர் அணி என்னவாகும் என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களில் எழுந்துள்ளது. எதிர்ப்புதி.மு.க.,வில், இளைஞரணி செயலர் பதவியை, உதயநிதி ஏற்ற பின், நட்சத்திர ஓட்டலில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு, விருந்து அளித்து உற்சாகப்படுத்தினார். மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தி, தன்
மகளிர் அணி, இளம்பெண்கள் அணி,  கனிமொழி, உதயநிதி, udhayanithi, woman team, kanimozhi, தி.மு.க., திமுக, உதயநிதி ஸ்டாலின், தினமலர், dinamalar,

இளைஞர் அணி செயலர் உதயநிதி தலைமையில், புதிதாக, இளம் பெண்கள் அணி உதயமானால், கனிமொழி தலைமையிலான மகளிர் அணி என்னவாகும் என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களில் எழுந்துள்ளது.


எதிர்ப்பு


தி.மு.க இளைஞரணி செயலர் உதயநிதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருக்காரு, இதற்கு நடுவே தன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடம் திமுகவில் புதியதாக இளம் பெண்கள் அணியை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கார். ஏற்கனவே கனிமொழி தலைமையில் மகளிர் அணி செயல்பட்டு வரும் நிலையில், புதியதாக உருவாக்கபட இருக்கும் இளம் பெண்கள் அணியை எதிர்த்து உட்கட்சிபூசல் உருவாகியுள்ளது. தி.மு.க இளைஞர் அணி தலைவராக ஸ்டாலின் பொருப்பேற்றதும், மாணவர் அணி பலமிழந்து போல, மகளிர் அணியும் பலமிழக்கும் என்ற கவலையில் கனிமொழி இருக்காங்க.

தி.மு.க.,வில், இளைஞரணி செயலர் பதவியை, உதயநிதி ஏற்ற பின், நட்சத்திர ஓட்டலில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு, விருந்து அளித்து உற்சாகப்படுத்தினார். மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தி, தன் ஆதரவாளர்களை, மாவட்ட துணை அமைப்பாளர் பதவிகளுக்கு நியமித்தார். சமீபத்தில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரம் மேற்கொள்வதற்கு முன், தன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடம், இளம் பெண்கள் அணியை உருவாக்குவது குறித்து, உதயநிதி ஆலோசனை நடத்திஉள்ளார்.

இது தெரிந்ததும், மகளிர் அணி நிர்வாகிகள் சிலர், இளம்பெண் அணியை துவக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இது குறித்து, தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது:மகளிர் அணி செயலராக, கனிமொழி பொறுப்பேற்ற பின், கட்சியில், நீண்ட காலமாக உழைத்தவர் களுக்கு, முக்கிய பதவிகளை வழங்கி, மகளிர் அணியை பலப்படுத்தி வைத்துள்ளார். தற்போது, மகளிர் அணிக்கு போட்டியாக, இளம் பெண்கள் அணி உருவானால், மகளிர் அணிக்கு முக்கியத்துவம் குறைந்து விடும்.


பின்னடைவு


மகளிர் அணிக்கும், இளம்பெண்கள் அணிக்கும் இடையே, மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரித்து விடும். சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளை, மாவட்ட வாரியாக, மகளிர் அணியினர் தக்க வைத்துள்ளனர்; அதற்கும் பின்னடைவு ஏற்படும். தி.மு.க.,வில், இளைஞர் அணி உருவாவதற்கு முன், மாணவர் அணி பலமாக இருந்தது. ஆனால், ஸ்டாலின், இளைஞர் அணி தலைவரான பின், அந்த அணி முக்கியத்துவம் பெற்றது.

ஆனால், மாணவர் அணி வீழ்ச்சியை சந்தித்தது. அன்று வீழ்ந்த மாணவர் அணி, இன்று வரை, அப்படியே தான் இருக்கிறது. எனவே, இளம்பெண்கள் அணி உருவானால், மகளிர் அணியும், மாணவர் அணியை போலவே வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதால், கனிமொழி கடும் கவலையில் உள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-அக்-201905:23:01 IST Report Abuse
meenakshisundaram திமுகவில் விரைவில்' சித்திகள் 'அணி ஆரம்பிக்க வேண்டும் ,எங்கள் கனிமொழியை அதன் தலைவராக்கி பிறகு சித்தப்பாக்கள் அணியும் ஆரம்பிக்க வேண்டும்.அப்போதான் கனியின் ஆட்களுக்கு வேலை(?) கிடைக்கும்.அண்ணாதுரை காலத்தில் ஏதோ போஸ்டர் ஓட்டுபவர்கள் லெவெலில் ஆரம்பித்த இந்த திமுக இப்போ வெறும் time பாஸ் இக்காக மட்டுமே இருக்கு ,நடத்தப்படுது
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-அக்-201901:57:28 IST Report Abuse
Rajagopal கனிமொழியை காலப்போக்கில் ஓரங்காட்டி விடுவார்கள். உதயநிதி அரசியல் வயதுக்கு வந்ததும், கனிமொழி மீது இருக்கும் கேஸ்கள் திறக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப் படுவார். கருணாநிதியின் குள்ள நரி தந்திர புத்தி அவரது மகளிடம் இருக்கிறது. அதனால் அவரையும், அழகிரியைப் போல அமுக்கி விடுவார்கள்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-அக்-201911:56:22 IST Report Abuse
skv srinivasankrishnaveniஆஹா அதெல்லாம் ராசாத்திக்கிட்ட நடக்காதுய்யா நடக்காது அவப்பெற்ற பொண்ணு கனிமொழி கேக்கோணுமா சுடாலின் ஏமாந்தால் தான் தான் சி எம் நீ சொல்லுன்னு குர்ஸியைபிடுங்கின்னுஓடிடுவா...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
20-அக்-201922:47:03 IST Report Abuse
konanki இது வராது. கிச்சன் காபினட் கல்வி இதுக்கு அனுமதி தர மாட்டார்கள். கஷ்டப்பட்டு குஷ்பு வை வெளியே துரத்தினார். இளம் தலைவி குடும்ப அரசியலுக்கு பெரிய ரிஸ்க்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X