பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை: மின் இணைப்பு துண்டிப்பு

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019
Share
Advertisement

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வட சென்னை பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




வடகிழக்கு பருவ மழை கடந்த 17 ம் தேதி முதல் துவங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து வரும் நாட்களில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.


latest tamil news



இந்நிலையில்இன்று சென்னையில் தி.நகர் ,சைதாப்பேட்டை, நந்தனம் அசோக்நகர் அடையாறு தேனாம்பேட்டை , ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கோபாலபுரம், மந்தைவெளி மயிலாப்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், புதுவண்ணாரபேட்டை, மாதவரம், கொளத்துார், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.


நீலகிரி மாவட்டம்


நீலகிரி மாவட்டம் குன்னுார் அருவங்காடு வெலிங்டன் வண்டிச்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்கிறது.

கன்னியாகுமரி திற்பரப்பு அருவி பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X