பொது செய்தி

இந்தியா

சாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (24)
Advertisement
  சாதனை, அளவை, தொட்டது, அன்னிய, செலாவணி ,கையிருப்பு

மும்பை: ரிசர்வ் வங்கியின், அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை தொட்டுள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:இம்மாதம், 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 187.9 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவான, 43 ஆயிரத்து, 971 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 31.22 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு முந்தைய வாரத்திலும், அதுவரை இல்லாத வகையில், அன்னிய செலாவணி கையிருப்பு, 424 கோடி டாலர் அதிகரித்து, 43 ஆயிரத்து, 783 கோடி டாலராக அதிகரித்திருந்தது.




ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத புதிய உயரத்தை தொட்டுள்ளது. அக்.11ம் தேதி நிலவரப்படி அன்னியச் செலாவணி கையிருப்பு, 187.9 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவிற்கு 43 ஆயிரத்து 971 கோடி டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பில் 31.22 லட்சம் கோடி ரூபாய். 187.9 கோடி அமெரிக்க டாலர்கள் 43 ஆயிரத்து 971 கோடி டாலராக உள்ளது இந்திய மதிப்பில் 31.22 லட்சம் கோடி ரூபாய் மேலும் தங்கத்தில் இருப்பு மதிப்பு, 2,833 கோடி ரூபாய் குறைந்து, 1.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதுபோல் பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை, 70 லட்சம் அமெரிக்க டாலர் அதிகரித்து , 362.3 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்ப்பில் 25 ஆயிரத்து 723 கோடி ரூபாய்.


இது இந்திய மதிப்பில், 31.09 லட்சம் கோடி ரூபாய்.நடப்பு மாதம், 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கம் இருப்பு மதிப்பு, 2,833 கோடி ரூபாய் குறைந்து, 1.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும், 70 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்து, 362.3 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில், 25 ஆயிரத்து, 723 கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி, தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
20-அக்-201912:33:36 IST Report Abuse
S.kausalya இந்தியா, குறிப்பாக தமிழ் நாடு ஏழை நாடே இல்லை. ₹ 2500.கொடுத்து படம் பார்ப்பது பணக்காரன் இல்லை, நடுத்தர வர்க்கமும் இல்லை. ஏழை மக்கள் தான். டாஸ்மாக் வியாபாரம் peruguvadharkkum காரணம். அவர்கள் தான். நூறில் ஒரு முற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் குடித்தால் அதிகம். ஆனால் நாம், நூற்றுக்கு 50 பேர் இதே வேலையாக தான் இருக்கிறோம். இட ஒதுக்கீட்டில். வேலை பெற்றும் முன்னேற முடியாததற்கு காரணமும் இந்த குடி தான்.. சினிமா காரன் கோடி களில் ஊதியம் வாங்க, இவர்கள் ஆயிர கணக்கில் கொடுத்து டிக்கெட் வாங்கி பட் பார்க்க அலைகிறார்கள்.. அப்புறம். இந்தியா எப்படி ஏழை நாடு..
Rate this:
Share this comment
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
20-அக்-201908:54:48 IST Report Abuse
P Karthikeyan எங்கே இருந்தாலும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல பேசுவதை அடிச்சுக்க ஆளே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு பொருளாதார புலிகள் இருந்தார்கள். நாடு நல்லாவா இருந்தச்சு?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
20-அக்-201908:27:40 IST Report Abuse
வல்வில் ஓரி கப்பன் வெச்ச பேரை சொல்ல அவமானப்படுகிற ஒருவனாதான் இருக்கும்
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
20-அக்-201914:37:38 IST Report Abuse
 Muruga Velசத்தமா சொல்லாதே ..நீயே அந்த கேஸ் தான் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X