சிதம்பரத்துக்கு கைமாறிய ரூ.35 கோடி: 'அப்ரூவர்' இந்திராணி வாக்குமூலம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (24)
Advertisement
 சிதம்பரம் , இந்திராணி, வாக்குமூலம்,chidambram, inx media , arrest, அப்ரூவர், இந்திராணி, வாக்குமூலம்

புதுடில்லி: 'ஐ.என்.எஸ்., மீடியா' ஊழல் வழக்கில், தங்களுக்கு உதவுவதற்காக, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவருடைய மகன் கார்த்திக்கு, 35 கோடி ரூபாய் அளித்ததாக, இந்த வழக்கில், 'அப்ரூவராக' மாறியுள்ள இந்திராணி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல் அனுமதி வழங்கப்பட்டது.தன் மகன் கார்த்தியின் தலையீட்டால், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், தற்போது, அமலாக்கத் துறை காவலில் உள்ளார்.

இந்த நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. அதில், சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா உரிமையாளர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியான, இந்திராணி அப்ரூவராகி உள்ளார். தன்னுடைய மகள் கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி அளித்துள்ள வாக்குமூலத்தை, குற்றப்பத்திரிகையில், சி.பி.ஐ., குறிப்பிட்டு உள்ளது.

'எங்களுக்கு உதவியதற்காக, சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு, வெளிநாடுகள் மூலமாக, 35 கோடி ரூபாய் பணத்தை வழங்கினோம்' என, தன் வாக்குமூலத்தில் இந்திராணி கூறியுள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து தகவல் கேட்டு, சி.பி.ஐ., முறைப்படி கடிதம் எழுதியுள்ளது; பதிலுக்காக காத்திருப்பதாக, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai,இந்தியா
21-அக்-201909:45:49 IST Report Abuse
krishna இந்த கேடு கேட்ட கல்லா பேட்டி சிதம்பரம் குடும்பத்திற்கு இன்னுமா சில திருடர்கள் முட்டு கொடுக்கிறார்கள்.இதில் கேவலம் மன் மோகன் சிங்க் என்னும் SPINLESS ஒண்டெர் கூவுவதுதான். ராஜசேகரன் என்னும் ஒரு வாக்கிலும் கேன பய என்ன கூவு கூவினான் பசி தமிழன் என்பதால் கைது செய்யப்பட்டாராம்.அதுபோல தஹில் ராமமணிக்கும் அவன் கூவும் போதே தஹில் மேடம் மிக பெரிய கொள்ளைக்காரி என நினைத்தேன் அது உண்மைதான்.இந்த கொள்ளை கூட குடும்பம் முழுவதும் திஹாரில் வாழ்நாள் முழுவதும் கலி TYHINGA வேண்டும். கொள்ளை பணம் முழுவதும் பிடுங்கி கோவத்துக்கு போக வேண்டும்.என்ன ஆட்டம் போட்டான் இந்த பசி என்னும் திருடன் மாத்திரம் அல்ல தேச விரோதியும் கூட.இந்த காங்கிரஸ் திருடர்களுக்கு தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்பு கவனிக்க பட வேண்டும்.இத்தாலியன் ராணி நிச்சயமாக தொடர்பில் IRUNDHUIRUPPA
Rate this:
Share this comment
Cancel
LetsVALUE.org - Democracy,இந்தியா
20-அக்-201921:45:49 IST Report Abuse
LetsVALUE.org ஆல் பிக் காமெடி
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-அக்-201919:07:02 IST Report Abuse
Sampath Kumar பூ இம்ம்புட்டு தானா?? தமிழ் நாடு கான்ட்ராக்ட்டர் இதை விட அதிகம் சம்பாதிக்கிறார் ??? இதில் இருந்து இந்த கேஸ் நிக்காது ஏன்றதே தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X