மஹாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல்: ஓய்ந்தது பிரசாரம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Updated : அக் 21, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
மஹாராஷ்டிரா, ஹரியானா,சட்டசபை தேர்தல், ஓய்ந்தது பிரசாரம்,  பாதுகாப்பு ஏற்பாடு,  Maharastra, Hariyana, Assembly election, adithya thackeray,

மும்பை: மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை பொதுத்தேர்தலுக்கான பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை நடக்க உள்ள ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., -- சிவசேனா கூட்டணி அரசு அமைந்து உள்ளது. மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், தனித் தனியாக போட்டியிட்டு, தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அரசை அமைந்தன.தற்போது, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல் முக்கிய எதிர்க்கட்சிகளான, காங்., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.முதல் முறைஇந்தத் தேர்தலுக்கான பிரசாரம், நேற்றுடன் முடிவடைந்தது.

பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர், அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உத்தவ் தாக்கரேயின் மகன், ஆதித்ய தாக்கரே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.காங்கிரஸ் சார்பில், முன்னாள் தலைவர், ராகுல், தேசியவாத காங்., தலைவர், சரத் பவார் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாளை ஓட்டுப் பதிவு நடப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மூன்று லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பையில், பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்களும், தொழில் அதிபர்களும் ஓட்டளிக்க உள்ளதால், அங்கு அதிக அளவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் நக்சல் பாதிப்பு உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில், ஹெலிகாப்டர்களும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.ஹரியானாவில்...முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ள ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது.

இதற்காக, 75 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேசியத் தலைநகர் டில்லியை ஒட்டி யுள்ளதால், இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர, தமிழகம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது.இந்த தேர்தல் முடிவுகள், வரும், 24ல் வெளியாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-201912:10:56 IST Report Abuse
Lion Drsekar பரம்பரை ஆட்சியா மக்களாட்சியா என்று பார்ப்போம் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-அக்-201907:30:19 IST Report Abuse
blocked user குற்றுயிராய் கிடக்கும் காங்கிரசுக்கு புதுத்தெம்பு கிடைக்குமா... இல்லை என்றுதான் தோன்றுகிறது. பாஜகவின் நட்சத்திரப்பேச்சாளர் வின்சி வேறு பிரச்சாரம் செய்து இருக்கிறார்...
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
20-அக்-201906:33:03 IST Report Abuse
Palanisamy Sekar இரண்டு மாநிலங்களிலும் பா ஜ க தான் வெற்றிபெறும். இதில் எந்த விமர்சனமும் தேவையற்றது. நாடுமுழுக்க பா ஜ க வுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியை இல்லை எனலாம். காங்கிரஸ் அது முடிந்துபோன கட்சி. எல்லா மாநிலத்திலும் அது இருக்கா இல்லையா என்றே தெரியதா அளவுக்கு காணாமல் போய்விட்டது. பல பெரிய தலைகள் எல்லாம் பா ஜ க பக்கம் ஓடோடி வருகின்றார்கள். இருக்கின்ற சில தலைகள் என்றைக்கு உள்ளே போகப்போகிறோம்..செய்த ஊழல்களுக்கு என்று தேதியை எதிர்பார்த்து நிம்மதியின்றி இருக்கின்றார்கள். மோடியின் ஜாதகப்படி அடுத்த தேர்தலிலும் அவரே பிரதமர் என்கிற நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பா ஜ கவை எதிர்க்க ஆளே இல்லாமல் காட்டுராஜா சிங்கம் போல பவனி வருகின்றது பா ஜ க..எதிர்பார்த்த அளவை காட்டிலும் காங்கிரஸ் இப்படி தோற்கும் என்று யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அடி மிக பலமாக இருக்கப்போகிறதை காட்டுகின்ற தேர்தலாக இருக்கும் என்பதுதான் நிஜம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X