உஷார்: தீபாவளிக்கு முன் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி: ஊடுருவலை முறியடிக்க உளவுத்துறை எச்சரிக்கை

Updated : அக் 20, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement
தீபாவளி, தாக்குதல், பயங்கரவாதிகள், சதி,தயார், இந்தியா, தினமலர்,  Deepavali, dinamalar, terrorists,  attack, India,

புதுடில்லி: கொடூர தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன், நேபாளம் வழியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதை, உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன், இந்த தாக்குதலை நடத்த, அவர்கள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம், பயங்கவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை, நம் விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பின், எல்லையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்தது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, ஆக., 5ல் ரத்து செய்தது. இது, பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.


புலம்பல்

அமெரிக்கா உட்பட பல நாடுகளிடமும், ஐ.நா., சபையிலும், காஷ்மீர் விவகாரம் பற்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புலம்பினார். ஆனால், உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு, எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தி, அங்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, ஆதரவு பெருகியது. இதனால், ஏற்பட்ட எரிச்சலில், எல்லையில், பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சியில், பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதற்காக, எல்லை பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்பும் வகையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், அத்துமீறி, பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாலும், தடையுத்தரவுகள் அமலில் இருப்பதாலும், பாகிஸ்தானால் நினைத்தபடி பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முடியவில்லை.

எல்லையில், பாகிஸ்தானைச் சேர்ந்த, லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீருக்கும் ஊடுருவ காத்து இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்தது. நம் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பால், பயங்கராவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டன. இதனால், வேறு வழிகளில் இந்தியாவுக்குள் ஊடுருவ, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டுஉள்ளனர். அவர்களது இந்த முயற்சியை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.


சதி திட்டம்

இந்தியா - -நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கோரக்பூரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் நடமாட்டத்தை, உளவுத்துறை கண்டுபிடித்தது. மொபைல் போன்களில் அவர்கள் பேசிய பேச்சுக்களை, உளவுத்துறை அதிகாரிகள் இடைமறித்து கேட்டனர்.அப்போது, இந்தியாவில், இரண்டு முக்கிய நகரங்களில் ஊடுருவி, தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்தது. நாடு முழுவதும், வரும், 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்தியாவில்மாபெரும் தாக்குதல் நடத்த, அவர்கள் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. நேபாளம் வழியாக ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐந்து பயங்கரவாதிகளும், இரு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு, டில்லியிலும், மற்றொரு குழு, வேறொரு முக்கியமான நகரிலும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதும் உளவுத்துறைக்கு தெரிய வந்துள்ளது.

இந்த சதி திட்டத்தை செயல்படுத்த, 'சிலீப்பர் செல்' உறுப்பினர்களையும், பயங்கரவாதிகள் நாடி உள்ளனர்.ஜம்மு - காஷ்மீர், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008, நவ., 26ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் போல், ஒரு தாக்குதல் நடத்தவும், வாய்ப்புள்ளது என, உளவுத்துறை தெரிவித்துள்ளது.இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, உத்தர பிரதேசத்தில், நேபாள எல்லைப்பகுதியில், பயங்கரவாத தடுப்பு படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பகுதிகளிலும், பயங்கரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடிக்கவும், சதித்திட்டத்துக்கு முன் அவர்களை வேட்டையாடவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai ,இந்தியா
20-அக்-201917:48:49 IST Report Abuse
Balaji It is high time that India established an organization like "Mossad". Whoever speaks or harms the sovereignty of India, must be killed mercilessly.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-201912:33:16 IST Report Abuse
Lion Drsekar தற்போது ஒரு ஓய்வு பெற்ற முன்னாள் பெண் துணை கண்காளிப்பார் காவல் துறை அவர்களின் பேட்டி வாட்சப்பில் வந்து கொண்டு இருக்கிறது, அவர் கூறியது " அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் ஆனால் எங்களுக்கு எதுவுமே இல்லை, குடடிபட்டு முன்னாள் பிரதமர் தமிழகத்தில் கொலை செய்யப்பட்டார் அதில் நான் என் விரல்களை இழந்தேன் , எனக்கு ரூபாய் 5000 கொடுத்தார்கள், அதே போல் ஒரு எஸ் பி இறந்தார் , மனைவியும் இறந்தார், பிள்ளையும் படிக்க வசதி இல்லாமல் இறந்தார், குடும்பமே இன்று இல்லாமல் போய்வ்ட்டது, ஆனால் தவறு செய்தவர்கள் தனி தனி சிறைச்சாலைகளில் இருந்தாலும் அவர்களுக்கு கைபேசி, திருமணத்துக்கு வெளியே வந்து போக வசதி, மக்களின் வரிப்பணத்தில் இன்று வரை நல்ல பராமரிப்பு , இதற்க்கு ஒருவர் கூட பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அவர்களை ஒரு முக்கிய பிரமுகர்களாக்கி, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளும் அவரால் உட்கார்ந்தாள் செய்தி, உணவு உண்ணவில்லை என்றால் செய்தி என்று ஊட்டி ஊட்டி வளர்ப்பது எதற்க்காக என்று தெரியவே இல்லை என்று அழாத குறையாக பேசியிருக்கிறார், அவரை பேட்டி எடுத்து தினமலரில் செய்தியாக வெளியிட்டால் உண்மை தெரியவரும், அவர் மேலும் கூறுகையில் வெளிநாட்டில் தவறு செய்தவர்களை அன்றே தூக்கில் போடுகிறார்கள், ஆனால் இங்கே அவர்கள் இராஜ வாழ்வளித்த நோய்நொடி இல்லாமல் பார்த்துக்கொண்டு சீராட்டி வருவதோடு , எதற்க்காக மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய மக்கள் பிரநிதிகள் இது போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை என்று புலம்பி தள்ளிவிட்டார். தவறு செய்பவர்களுக்கு ஊடகங்கள் இருக்கின்றன ஆனால் பதவியில் இருக்கும் பல இன்னல்களுக்கு ஆளாகும் உங்களைப்போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு நேரடியாக ஊடகங்களுக்கு செய்தி கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் கூறியிருக்கிறார், மொத்தத்தில் இன்றைக்கு நாடு நான் கூறியது போல் சமூக விரோதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதற்கு, எனக்கு ஒரு துணையாக ஒரு துணை கண்காணிப்பாளரின் பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
20-அக்-201908:29:27 IST Report Abuse
சமத்துவம் நமது பாதுகாப்பு படையினரின் வேட்டை அவர்களை அனுப்பிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் எல்லை தாண்டியும் செல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X