பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம்

Added : அக் 19, 2019
Advertisement

சென்னை, 'சிறுபான்மையினரை பழித்து பேசிய ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர்' என தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓட்டு சேகரிக்க சென்றபோது சிறுபான்மையினர் பற்றி அநாகரிகமாக பேசியுள்ளார். அவர் அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள உறுதிமொழியை மீறியுள்ளார்.எனவே அவர் அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவராகிறார். சிறுபான்மையினரை மிரட்டும் வகையில் அவர் பேசியிருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடியாக அவர் நடந்து கொள்வதையே காட்டுகிறது.இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X