புவனகிரி:சிதம்பரம் அண்ணாமலைநகர் ஏ.ஆர்.ஜி., அகாடமி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி நிர்வாகி டாக்டர் ஆடியபாதம் தலைமை தாங்கினார்.
முதல்வர் கீதா கணேசன் வரவேற்றார். அண்ணாமலை நகர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ராமன், பள்ளி செயலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகா நோடல் அலுவலர் டாக்டர் எழில் மதனா ஆலோசனை வழங்கினார். சிவக்கம் சுகாதார ஆய்வாளர் கருணாநிதி உள்ளிட்ட சுகாதார துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
தினசரி பள்ளியில் துாய்மை பணியை, கண்காணிக்க பள்ளியின் சுகாதார துாதுவர்களாக சுபன், கோபிநாத், வாகினி, திவ்யபாரதி அடங்கிய மாணவ குழுவினர் நியமிக்கப்பட்டனர். துணை முதல்வர் பிரபு நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.